அவுஸ்திரேலியாவில் 10,000 பேருக்கு ஒரே
நேரத்தில் SMS மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்திலேயே இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
அந்த SMSல், உங்களைக் கொல்வதற்காக ஒருவர் எனக்கு பணம் கொடுத்துள்ளார். நீங்கள்
48 மணிநேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் எனக்கு 5,000 டொலர் அனுப்ப வேண்டும்.
இதை பொலிசிடமோ அல்லது வேறு யாரிடமோ கூறினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்.
killerking247@yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு உடனடியாக எனக்கு பணம்
அனுப்பவும் என கூறப்பட்டிருந்தது.
இந்த SMS-ஐ அனுப்பியவர் யார் என்பது குறித்தும், எங்கிருந்து அனுப்பப்பட்டது
என்பது குறித்தும் பொலிசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
எனினும் இதில் உண்மையில்லை என்றும், இது குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை
என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். |
0 comments:
கருத்துரையிடுக