
மும்பை அருகே கடலுக்கடியில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தேடப்பட்டு வந்த 2 அதிகாரிகள் கப்பலிலேயே பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியக் கடற்படையில், ரஷியாவில் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். சிந்துரத்னா என்னும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், மும்பையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை காலை கடலுக்கடியில் சென்று கொண்டிருந்தது. அதில் 70...