siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து : 2 உயர் அதிகாரிகள்

 மும்பை அருகே கடலுக்கடியில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தேடப்பட்டு வந்த 2 அதிகாரிகள் கப்பலிலேயே பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் கடற்படையில், ரஷியாவில் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். சிந்துரத்னா என்னும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், மும்பையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை காலை கடலுக்கடியில் சென்று கொண்டிருந்தது. அதில் 70 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இருந்தனர்.

அப்போது நீர்மூழ்கிக் கப்பலின் 3வது தளத்திலுள்ள வீரர்கள் தங்குமிடத்தில், திடீரென புகை பரவியது. இதனையடுத்து நீர்முழ்கியில் இருக்கும் அவசரகால தீயணைப்புக் கருவியை இயக்கி அந்தப் புகையை வீரர்கள் கட்டுப்படுத்தினர். இருப்பினும் புகையில் சிக்கி 7 வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மூலமாக மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தின்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 2 அதிகாரிகளின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. நீர்மூழ்கியில் உள்ள ஏதேனும் ஓரு அறையில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக