siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 24 பிப்ரவரி, 2016

ஐரோப்­பிய அமைப்பு சீனாவிற்கு எச்­ச­ரிக்கை அடக்கி வாசிக்க வேண்டும் ?

 சீன தொழில் துறையின், அள­விற்­க­தி­க­மான உற்­பத்­தித்­திறன், உள்­நாட்டில் மட்­டு­மின்றி, உலக நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யையும் பாதிக்­கி­றது’ என, ஐரோப்­பிய வர்த்­தக அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில்
 தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.அதில் மேலும் உள்ள விவரம்:சீன அரசின் சலு­கை­களால், ஏரா­ள­மான புதிய தொழிற்­சா­லைகள் உரு­வாகி, பொருட்கள் அப­ரி­மி­த­மாக உற்­பத்­தி­யா­கின்­றன. அதனால், ஏற்­று­மதி செய்தே ஆக வேண்­டிய கட்­டாயம் 
ஏற்­பட்­டுள்­ளது.
அதே­ச­மயம், சர்­வ­தேச மந்­த­நி­லையால், ஏற்­று­ம­தியை மேலும் அதி­க­ரிக்க முடி­யாமல், உள்­நாட்டில் பொருட்கள் தேக்­க­ம­டைந்து உள்­ளன. இதனால், உருக்கு சிமென்ட் உள்­ளிட்ட தொழில்­களின் விரி­வாக்­கத்­திற்கு, சீனா தடை விதித்­துள்­ளது. உற்­பத்தித் திறனை கட்­டுப்­ப­டுத்த தவ­றினால், எதிர்­கா­லத்தில், சீன பொரு­ளா­தாரம் எழுச்சி காணாது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜேர்மனி நாட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவியை அவரது கணவன் மற்றும் நண்பர் ஆகிய இருவர் உயிருடன் எரித்து கொலை செய்த குற்றத்திற்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜேர்மனி தலைநகரான பெர்லினுக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் 20 வயதான நபர் ஒருவர் தன்னுடைய 19 வயதான மரியா என்ற பெயருடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
ஆண் என்ற திமிர் கொண்ட அந்த நபர் தன்னுடைய மனைவி தன் முழு கட்டுப்பாட்டில் ஒரு பொம்மையை போல் இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
பாலியல் உறவு கொள்வது முதல் அனைத்தும் கணவனின் விருப்பத்தின் பேரிலேயே நடந்துள்ளது. இதனால் மனைவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதன் பிறகு, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில் மனைவி கர்ப்பம் தரித்து 8 மாதத்தை அடைந்துள்ளார்.
மனைவி தன்னை எதிர்த்து பேச தொடங்கியதால் ஆத்திரம் அடைந்த கணவன் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்கான தன் வயதுடைய ஒரு நண்பரின் ஆலோசனையை பெற்று அதனை செயல்படுத்தவும் தயாரானார்.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி ‘நான் திருந்தி விட்டேன். இனி நாம் இருவரும் சண்டையிடாமல் மகிழ்ச்சியாக வாழலாம். நமக்கு பிறக்கவுள்ள குழந்தைக்கு புதிய ஆடைகளை வாங்கி வரலாம்’ என மனைவியை கணவன் அழைத்துள்ளார்.
கணவனின் சதி திட்டத்தை அறியாத அந்த அப்பாவி கர்ப்பிணி பெண் ‘இனி நம் வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகிறது’ என உற்சாகத்தில் மூழ்கியவாறு கணவனுடன் புறப்பட்டார்.
ஆனால், நகத்திற்கு செல்லாமல் தன்னுடைய மனைவியை அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கே, ஏற்கனவே திட்டமிட்டவாறு அவரது நண்பர் காத்திருந்துள்ளார். நடக்க போற விபரீதத்தை திடீரென உணர்ந்த மனைவி கணவனிடம் கெஞ்சியுள்ளார்.
‘நம்முடைய குழந்தை வயிற்றில் வளர்ந்து வருகிறது. தயவு செய்து என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்துக்கொள்ளுங்கள். நம் குழந்தையை ஒன்றும் செய்யாதீர்கள்’ என கதறி அழுதுள்ளார்.
மனைவியின் கதறலை கண்டுக்கொள்ளாத அந்த கொடூரமான கணவன் முதலில் தான் கொண்டு வந்திருந்த கத்தியை கொண்டு 
தாக்கியுள்ளான்.
பின்னார், தன்னுடைய மனைவியை நண்பன் பிடித்துக்கொள்ள அவர் உடல் முழுவதும் எரிவாயு எண்ணையை உற்றி தீப்பற்ற வைக்கிறான். கர்ப்பிணி மனைவி தன் வயிற்றை பிடித்துக்கொண்டு துடி துடித்து உயிரிழந்துள்ளார்.

கொடூரமான கணவன் மற்றும் அவரது நண்பனின் இந்த இரக்கமற்ற சம்பவம் தொடர்பான இறுதி வழக்கு கடந்த செவ்வாய்கிழமை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கர்ப்பிணி பெண் ஒருவரின் பிரசவம் குளியலறையில்!!!

கனடாவில் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை குளியலறைக்கு தூக்கி சென்று குழந்தையை பெற்றெடுக்க உதவிய கணவனின் அபாரச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள செயிண்ட் அல்பேர்ட் நகரில் Darrell மற்றும் Lindsay Muzichuk என்ற தம்பதி வசித்து 
வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பிள்ளை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக மனைவி கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 1ம் திகதி அதிகாலை 5 மணியளவில் மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு கணவனை 
அழைத்துள்ளார்.
உடனே தயார் ஆகி கணவன் காரை எடுக்க வெளியே ஓடிய நேரத்தில் மனைவி வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டு தரையில் படுத்துள்ளார்.
நிலையை அறிந்த கணவன் காரை எடுக்கும் முயற்சியை விடுத்து கைப்பேசி மூலம் அவசர மருத்துவர் குழுவிற்கு தகவல் அளித்துவிட்டு வீட்டிற்குள் ஓடியுள்ளார்.
தரையில் படுத்திருந்த மனைவி ‘என்னால் இனி தாங்க முடியாது. சீக்கிரம் உதவி செய்யுங்கள்’ என கதறியுள்ளார்.
உடனே மனைவியை அள்ளி தூக்கிய கணவன் அருகில் இருந்த குளியலறைக்கு ஓடி, அங்கு தரையில் படுக்க
 வைத்துள்ளார்.
மனைவியின் கால்களை பிடித்துக்கொண்டு ஒரு மருத்துவரைபோல் மனைவியின் வயிற்றை கீழ்நோக்கி அழுத்தியுள்ளார்.
இந்த நேரத்தில் குழந்தையின் தலைப்பகுதி வெளியே வந்துள்ளது. பின்னர், மேலும், 3 முறை மனைவியின் வயிற்றை அழுத்தியதும் குழந்தை முழுவதுமாக வெளியே வந்துள்ளது.
சுமார் 10 நிமிடங்கள் குளியலறையில் நடந்த இந்த போராட்டத்தின்போது திடீரென வீட்டு வாசலில் மருத்துவக்குழுவினரும் வந்துள்ளனர்.
மருத்துவர்கள் வீட்டிற்குள் வரும் அதே நேரத்தில் குழந்தையும் ‘வீர் ’என
 கதறி அழுதுள்ளது.
இது குறித்து தந்தை பேசியபோது, ‘பிரசவம் பார்ப்பது இது முதல் முறை என்பதால், பல தவறுகளை நேரிடவும் வாய்ப்புள்ளது. ஆனால், குழந்தை பிறந்ததும் உடனே கத்தி அழுதபோது தான் ‘எல்லாம் சுகமாக முடிந்துவிட்டது’ என நிம்மதி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
கணவனின் உதவி குறித்து மனைவி பேசியபோது, ‘சரியான நேரத்தில் எனது கணவர் உதவியதால் தான் இது சாத்தியமாகியுள்ளது. இவர் போன்ற ஒரு கணவர் கிடைத்திருப்பது எனது பாக்கியம். எங்களது பெண் குழந்தைக்கு அவா ரோஸ் என பெயர் சூட்டியுள்ளதாக உற்சாகமாக 
தெரிவித்துள்ளார்.
தம்பதியின் உதவிக்கு வந்த மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கணவனின் துணிகரச்செயலை பெரிதும் பாராட்டி அங்கிருந்து விடைபெற்று சென்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>