ஜேர்மனி நாட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவியை அவரது கணவன் மற்றும் நண்பர் ஆகிய இருவர் உயிருடன் எரித்து கொலை செய்த குற்றத்திற்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜேர்மனி தலைநகரான பெர்லினுக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் 20 வயதான நபர் ஒருவர் தன்னுடைய 19 வயதான மரியா என்ற பெயருடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
ஆண் என்ற திமிர் கொண்ட அந்த நபர் தன்னுடைய மனைவி தன் முழு கட்டுப்பாட்டில் ஒரு பொம்மையை போல் இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
பாலியல் உறவு கொள்வது முதல் அனைத்தும் கணவனின் விருப்பத்தின் பேரிலேயே நடந்துள்ளது. இதனால் மனைவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதன் பிறகு, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில் மனைவி கர்ப்பம் தரித்து 8 மாதத்தை அடைந்துள்ளார்.
மனைவி தன்னை எதிர்த்து பேச தொடங்கியதால் ஆத்திரம் அடைந்த கணவன் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்கான தன் வயதுடைய ஒரு நண்பரின் ஆலோசனையை பெற்று அதனை செயல்படுத்தவும் தயாரானார்.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி ‘நான் திருந்தி விட்டேன். இனி நாம் இருவரும் சண்டையிடாமல் மகிழ்ச்சியாக வாழலாம். நமக்கு பிறக்கவுள்ள குழந்தைக்கு புதிய ஆடைகளை வாங்கி வரலாம்’ என மனைவியை கணவன் அழைத்துள்ளார்.
கணவனின் சதி திட்டத்தை அறியாத அந்த அப்பாவி கர்ப்பிணி பெண் ‘இனி நம் வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகிறது’ என உற்சாகத்தில் மூழ்கியவாறு கணவனுடன் புறப்பட்டார்.
ஆனால், நகத்திற்கு செல்லாமல் தன்னுடைய மனைவியை அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கே, ஏற்கனவே திட்டமிட்டவாறு அவரது நண்பர் காத்திருந்துள்ளார். நடக்க போற விபரீதத்தை திடீரென உணர்ந்த மனைவி கணவனிடம் கெஞ்சியுள்ளார்.
‘நம்முடைய குழந்தை வயிற்றில் வளர்ந்து வருகிறது. தயவு செய்து என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்துக்கொள்ளுங்கள். நம் குழந்தையை ஒன்றும் செய்யாதீர்கள்’ என கதறி அழுதுள்ளார்.
மனைவியின் கதறலை கண்டுக்கொள்ளாத அந்த கொடூரமான கணவன் முதலில் தான் கொண்டு வந்திருந்த கத்தியை கொண்டு
தாக்கியுள்ளான்.
பின்னார், தன்னுடைய மனைவியை நண்பன் பிடித்துக்கொள்ள அவர் உடல் முழுவதும் எரிவாயு எண்ணையை உற்றி தீப்பற்ற வைக்கிறான். கர்ப்பிணி மனைவி தன் வயிற்றை பிடித்துக்கொண்டு துடி துடித்து உயிரிழந்துள்ளார்.
கொடூரமான கணவன் மற்றும் அவரது நண்பனின் இந்த இரக்கமற்ற சம்பவம் தொடர்பான இறுதி வழக்கு கடந்த செவ்வாய்கிழமை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக