siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கர்ப்பிணி பெண் ஒருவரின் பிரசவம் குளியலறையில்!!!

கனடாவில் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை குளியலறைக்கு தூக்கி சென்று குழந்தையை பெற்றெடுக்க உதவிய கணவனின் அபாரச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள செயிண்ட் அல்பேர்ட் நகரில் Darrell மற்றும் Lindsay Muzichuk என்ற தம்பதி வசித்து 
வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பிள்ளை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக மனைவி கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 1ம் திகதி அதிகாலை 5 மணியளவில் மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு கணவனை 
அழைத்துள்ளார்.
உடனே தயார் ஆகி கணவன் காரை எடுக்க வெளியே ஓடிய நேரத்தில் மனைவி வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டு தரையில் படுத்துள்ளார்.
நிலையை அறிந்த கணவன் காரை எடுக்கும் முயற்சியை விடுத்து கைப்பேசி மூலம் அவசர மருத்துவர் குழுவிற்கு தகவல் அளித்துவிட்டு வீட்டிற்குள் ஓடியுள்ளார்.
தரையில் படுத்திருந்த மனைவி ‘என்னால் இனி தாங்க முடியாது. சீக்கிரம் உதவி செய்யுங்கள்’ என கதறியுள்ளார்.
உடனே மனைவியை அள்ளி தூக்கிய கணவன் அருகில் இருந்த குளியலறைக்கு ஓடி, அங்கு தரையில் படுக்க
 வைத்துள்ளார்.
மனைவியின் கால்களை பிடித்துக்கொண்டு ஒரு மருத்துவரைபோல் மனைவியின் வயிற்றை கீழ்நோக்கி அழுத்தியுள்ளார்.
இந்த நேரத்தில் குழந்தையின் தலைப்பகுதி வெளியே வந்துள்ளது. பின்னர், மேலும், 3 முறை மனைவியின் வயிற்றை அழுத்தியதும் குழந்தை முழுவதுமாக வெளியே வந்துள்ளது.
சுமார் 10 நிமிடங்கள் குளியலறையில் நடந்த இந்த போராட்டத்தின்போது திடீரென வீட்டு வாசலில் மருத்துவக்குழுவினரும் வந்துள்ளனர்.
மருத்துவர்கள் வீட்டிற்குள் வரும் அதே நேரத்தில் குழந்தையும் ‘வீர் ’என
 கதறி அழுதுள்ளது.
இது குறித்து தந்தை பேசியபோது, ‘பிரசவம் பார்ப்பது இது முதல் முறை என்பதால், பல தவறுகளை நேரிடவும் வாய்ப்புள்ளது. ஆனால், குழந்தை பிறந்ததும் உடனே கத்தி அழுதபோது தான் ‘எல்லாம் சுகமாக முடிந்துவிட்டது’ என நிம்மதி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
கணவனின் உதவி குறித்து மனைவி பேசியபோது, ‘சரியான நேரத்தில் எனது கணவர் உதவியதால் தான் இது சாத்தியமாகியுள்ளது. இவர் போன்ற ஒரு கணவர் கிடைத்திருப்பது எனது பாக்கியம். எங்களது பெண் குழந்தைக்கு அவா ரோஸ் என பெயர் சூட்டியுள்ளதாக உற்சாகமாக 
தெரிவித்துள்ளார்.
தம்பதியின் உதவிக்கு வந்த மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கணவனின் துணிகரச்செயலை பெரிதும் பாராட்டி அங்கிருந்து விடைபெற்று சென்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 comments:

கருத்துரையிடுக