ஜேர்மனி நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த மூதாட்டியின் மீது பல டன் எடையுள்ள மருத்துவ பரிசோதனை கருவி தவறி விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஜேர்மனியில் உள்ள Osnabuck என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் திசு சிதைவு நோய் காரணமாக 77 வயதான மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
மூதாட்டியை பரிசோதனை செய்வதற்காக அவரை மருத்துவ கட்டிலில் படுக்க வைத்துள்ளனர்.
மூதாட்டியின் உடலை பரிசோதனை செய்யக்கூடிய காமா கமெரா என்ற பல டன் எடையுள்ள கருவி அவரது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருந்துள்ளது.
அப்போது திடீரென அந்த கருவி உடைந்துக்கொண்டு மிக வேகமாக கீழே வந்த மூதாட்டியின் தலை மீது விழுந்து நசுக்கியுள்ளது.
சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தில் மூதாட்டி படுக்கையிலேயே தலை, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பரிசோதனை கருவியில் சில தொழில்நுட்ப காரணமாக தான் அது உடைந்து விழுந்துள்ளதாகவும், அந்த கருவியை இயக்கிய ஊழியர் மீது எந்த தவறும் இல்லை என கூறப்படுகிறது.
அதே சமயம், இந்த கருவியில் குறைபாடுகள் உள்ளனவா என சில நாட்களுக்கும் முன்னர் தான் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது.
ஜேர்மன் நாட்டு மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் தற்போது தான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்திருந்தாலும், நேற்று தான் ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக