siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 28 ஜனவரி, 2016

ஓர் அபாரமான நற்செய்தி சுவிஸ் நாட்டு குடிமக்களுக்கு???

சுவிட்சர்லாந்து நாட்டில் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தரமாக மாத வருமானத்தை அளிக்கும் அபாரமான புதிய திட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகளவில் எந்த நாடும் அறிமுகப்படுத்தாத அபாரமான திட்டத்தை சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் மாதந்தோறும் 2,500 பிராங்க் ஊதியத்தை அரசே வழங்கும்.
ஒவ்வொரு இளைஞருக்கும் 2,500 பிராங்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் 625 பிராங்க் பணமும் மாதந்தோறும் வழங்கப்படும்.
இதன் மூலம், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அனைத்து குடிமக்களும் நிரந்தரமான மாத ஊதியம் பெற வழி வகை 
செய்யப்படும்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டம் அறிமுகமானதும், அரசுக்கு ஆண்டுதோறும் 208 பில்லியன் பிராங்க் செலவாகும்.
இந்த 208 பில்லியன் பிராங்க் பணத்தை பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து 153 பில்லியன் பிராங்க் நிதியையும், காப்பீடு மற்றும் சமூக நல உதவிகளுக்கு செலவிடப்படும் 55 பில்லியன் நிதியையும் கொண்டு இந்த புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
புதிதாக அறிமுகமாகமுள்ள இந்த திட்டத்திற்கு நேற்று சுவிஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், சுவிஸ் குடிமக்கள் பணிக்கு செல்லாமலேயே மாதந்தோறும் நிரந்தர ஊதியம் அளித்தால், ஏற்கனவே பணிக்கு சென்றுக்கொண்டு இருப்பவர்கள் திடீரென வேலையை விட்டு விடுவார்களா என்பது குறித்து ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், ’வேலைக்கு செல்லாமல் தங்களுக்கு வருமானம் வந்தாலும் கூட நாங்கள் தொடர்ந்து வேலைக்கு செல்வோம் என பெரும்பாலான நபர்கள் வாக்களித்துள்ளனர்.
இவர்களில் 2 சதவிகித நபர்கள் மட்டுமே வேலைக்கு செல்வதை நிறுத்தி விடுவோம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் எந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், அதற்கு பொதுமக்களின் ஒப்புதல் அவசியம்.
எனவே, இந்த புதிய சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் யூன் 5ம் திகதி நடைபெற உள்ளதாகவும், பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவு அளித்தால், இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 comments:

கருத்துரையிடுக