28.07.2012பல விதமான செய்திதொகுப்புகள் உள்ள தொடர் செய்திகள் ஓர் பார் வையில்உள்ளது நீருக்கடியில் நீந்தக் கூடிய நவீன ரோபோ கண்டுபிடிப்பு
ரோபோக்களை உருவாக்குவதில் அன்றாடம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் தற்போது நீருக்கு அடியில் நீச்சல் போடக்கூடிய அதி நவீன
ரோபோவை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். மேன்டாபாட் என அழைக்கப்படும் இந்த ரோபோவை
பற்றி கருத்துத் தெரிவித்த வேர்ஜினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிலாரி
பார்ட் ஸ்மித் கூறுகையில், ரோபோக்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள
இந்த ரோபோவானது எதிர்காலத்தில் கடலடி ஆராய்ச்சிகள் பலவற்றிலும் பெரும் உதவியாக
இருக்கும் எனத் ...
போன் பொம்மை
ஸ்மார்ட் பெட் என்ற அடையாளத்தோடு ஜப்பானில் அறிமுகமாகியுள்ள எந்திர நாய் பொம்மை
இது பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான பாண்டாய் உருவாக்கியுள்ள இந்த நாய் பொம்மை
யில், ஒரிஜினல் நாயின் முகத்துக்குப் பதிலாக ஆப்பிள் ஐபோன் வைக்கப்பட்டுள்ளது. இந்த
நாயை குரைக்க வைக்கலாம், ஓட வைக்கலாம், அழச் செய்யலாம். ஐபோனின் திரை யில் ஒளிரும்
ஐகான்களை இயக்கி, கட்டளைகளைப் பிறப்பித்தால் போதும் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச
பொம்மை கண்காட்சியில் புதுமையான பொம்மை என்ற விருதைப் பெற்றிருக்கிறது இந்த போன்
...
மும்பையில் குடிநீர் வெட்டு 20 சதவீதமாக அதிகரிக்கப்படுமா?
சி.எஸ்.டி: மும்பையில் 20 சதவீத குடிநீர் வெட்டை அமல்படுத்துவது குறித்துÞ இன்று
நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. மும்பையில் இந்த ஆண்டு
எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் பருவமழை பெய்யவில்லை. இதனால் மும்பைக்கு குடிநீர்
வழங்கும் ஏரிகளில் குடிநீர் மட்டம் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. இதையடுத்து
ஏற்கனவே 10 சதவீதம் குடிநீர் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் 10
சதவீதம் அதிகரிக்க மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது பற்றிய முடிவு இன்று
நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்பட ...
புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்
அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ்
ஆட்டோ திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம்
டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000
பைக்குகள் விற்பனையாகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ தற்போது கேடிஎம்
பிராண்டில் மேலும் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டியூக்
வரிசையில் 125சிசி மற்றும் 375சிசி பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம்
திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு பைக் மாடல்களும் ஏற்கனவே ஐரோப்பிய
...
சான்ட்ரோ கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு
விற்பனை சரிந்து வருவதால் தனது வெற்றிகரமான மாடலான சான்ட்ரோ கார் உற்பத்தியை
முற்றிலும் நிறுத்திவிடுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. ஹூண்டாயின் முதல் கார் மாடலான சான்ட்ரோ கடந்த 1998ஆம் ஆண்டு
அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் பெரிய
வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு சான்ட்ரோ ஸிங் மேம்படுத்தப்பட்ட
மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. சான்ட்ரோவின் வெற்றி தொடர்ந்தது. இந்நிலையில்,
கடந்த ஆண்டு இயான் என்ற புத்தம் புதிய சிறிய காரை ஹூண்டாய் அறிமுகம் செய்தது.
கவர்ச்சியான ...
எங்கிருந்தாலும் மொபைலை சார்ஜ் செய்ய மினி சார்ஜர் அறிமுகம்
இக்காலத்தில் மொபைல் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இதில் இருக்கும் ஒரு சிறிய குறைபாடு என்னவென்றால் விரும்பும் நேரத்தில் பேட்டரியை
சார்ஜ் செய்துக்கொள்ள இயலுவது இல்லை. ஆனால் இந்தக் குறையை நீக்குவதற்காக
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு சிறிய மொபைல் சார்ஜைரை களமிறக்கி இருக்கிறது. இந்த
சார்ஜருக்கு சார்ஜ் எக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிறிய வடிவில்
இருக்கும் எந்த சார்ஜரை வெளியில் போகும் போது எளிதாக எடுத்தச் செல்ல முடியும். இந்த
சார்ஜ் எக்ஸில் 5,600 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி இருக்கிறது. அதோடு இதில் 2
யுஎஸ்பி ...
அக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு : மைக்ரோசாஃப்டு நிறுவனம்
புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு
நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி
கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று
அறிவித்திருக்கிறது.இந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம்
கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.
இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட
...
பல மாடல் கார்களை அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம்
கென்யாவில் எக்ஸ்யூவி, ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட பல மாடல்களை விற்பனைக்கு
அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. சர்வதேச வர்த்தகத்தை விரிவாக்கி வரும்
மஹிந்திரா நிறுவனம் ஆப்ரிக்க மார்க்கெட்டுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தென்
ஆப்ரிக்காவில் ஏற்கனவே எக்ஸ்யூவி உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வரும் அந்த
நிறுவனம் தற்போது கென்ய மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமான மாடல்களை
அறிமுகப்படுத்தியுள்ளது.எக்ஸ்யூவி 500, ஸ்கார்ப்பியோ, பிக்கப் டிரக்குகள், மேக்ஸிமோ
மினி டிரக் மாடல்கள் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது. சிம்பா நிறுவனம் கென்யாவில்
மஹிந்திரா ...
ஆப்பிளின் மினி ஐபேட் அறிமுகம்
அப்பிளின் அனைத்து ஐபேட்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள
நிலையில், தற்போது விலை குறைந்த சிறிய ஐபேட் ஒன்றினை வெளியிட அப்பிள்
திட்டமிட்டுள்ளது. இதற்கு ஐபேட் மினி என பெயரிப்படலாம் எனவும், இந்தாண்டின்
இறுதியில் இந்த ஐபேட் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்
அங்குலத்திரை 7அல்லது 8ஆக இருக்குமெனவும், 9.7 அங்குல ரெட்டினா திரையைக்
கொண்டிருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரெட்டினாக்கு பதிலாக சார்ப்
நிறுவனத்தின் டிஸ்ப்ளே உபயோகப்படுத்தப்படலாம். ஐபேட் மினியின் மற்றைய தொழில்நுட்ப
அம்சங்கள் தொடர்பான தகவல்கள் ...
ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்
நோக்கியா நிறுவனம் லுமியா 800 மற்றும் லுமியா 710 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய
சாஃப்ட்வேர் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது. இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம், ஒரே
நேரத்தில் 5 மின்னணு சாதனங்களில் 3ஜி வசதியினை பெறலாம் என்பது தான் இதன் சிறப்பு.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப சாதனங்களை இணைக்க வேண்டும் என்றால் அதற்கு
ரூட்டர் கருவி தேவைப்படுகிறது. ஆனால் நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன்
மூலம் நான்கு, ஐந்து மின்னணு சாதனங்களிலும் எளிதாக ஒரே நேரத்தில் 3ஜி வசதியை
பயன்படுத்தலாம். நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் அறிவிப்பை
அதிகாரப்பூர்வமாக ...
அட்டகாசமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்
நோக்கியா ஆஷா வரிசை மொபைல்களில் 202 மற்றும் 302 என்ற இந்த மொபைல்களின் விலை
விவரங்கள் வெளியாகி உள்ளது. நோக்கியாவின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தியில்
அதிகம் பிரசித்தம் பெற்றது. அந்த வகையில் இங்கு இரண்டு ஆஷா மொபைல்களின் தொழில்
நுட்ப விவரங்களையும், அதன் விலை பட்டியல் பற்றிய விவரங்களையும் பார்க்கலாம். 2.4
இஞ்ச் திரை கொண்ட ஆஷா- 202 மொபைலின் திரையின் மூலம் சிறந்த தகவல்களை தெளிவாக
பார்க்கலாம். கவர்ச்சிகரமான இந்த மொபைல் 10 எம்பி வரை இன்டர்னல் மெமரியினை கொண்டது.
ஆஷா -202 மொபைல் 2.0 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். ஆஷா-202 மொபைலில் 32
ஜிபி வரை இதன் மெமரி வசதியினை ...
கூகுளின் புதிய டேப்லட் அறிமுகம்
உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான்
நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது.
சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம்
புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஜெல்லிபீன் என்னும் புதிய
மென்பொருளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நெக்சஸ் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த
டேப்லட், ஆசஸ் எனப்படும் வன்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 7 அங்குல திரை அகலம் கொண்ட இந்த டேப்லட்டானது, கூகுளின் ஜெல்லிபீன்
...
பாதுகாப்பான இணையத்தள தேடலுக்கு குகூன்
பாதுகாப்பான இணையத்தள தேடலை மேற்கொள்வதற்கு குகூன் என்ற இணையத்தளம் உதவி
புரிகிறது. இந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் போது உங்களால் தேடப்பட்ட செய்திகளோ,
இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல்
செய்கிறது. இதன் மூலம் உங்களை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் தடுக்கிறது.
அத்துடன் மட்டுமல்லாமல் இணையம் மூலம் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை உள்ளே
வராமலும் இது தடுக்கிறது. மேலும் ஒரு மாற்று மின்னஞ்சலையும் உருவாக்கி தந்து
குப்பை மின்னஞ்சல்களில் இருந்தும் ...
கணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்
பொழுதுபோக்கிற்காகவும், மூளை விருத்தியை அதிகரிக்கவும் அதிகமானவர்களால் கணினி
விளையாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் கணினி
விளையாட்டானது புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டு
வருகின்றது. இம்மாற்றங்களின் அடிப்படையில் தற்போது கணினி விளையாட்டுக்களைக்
கட்டுப்படுத்துவதற்கென புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொடுதிரைக்
கட்டுப்படுத்திகள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரிங்போவ் என
அழைக்கப்படும் இந்த நவீன தொழில்நுட்பமானது அன்ராயிட் சாதனங்கள் மற்றும் ஐ.ஓ.எஸ்
சாதனங்கள் ...
மைக்ரோசாஃப்ட்டின் புதிய டேப்லெட் அறிமுகம்
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக சர்ஃபேஸ்
எனப்படும் புதிய டேப்லெட் கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம்
அறிமுகப்படுத்தியிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில்
மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் இதை
அறிமுகப்படுத்தினார். விண்டோஸ் 8 இயக்க அமைப்பில் செயல்படக்கூடிய இந்த
டேப்லெட்டுகள், ஏற்கெனவே சந்தையை ஆக்கிரமித்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடை
குறிவைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தனது சொந்தத் தயாரிப்பான
மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் அடோப் நிறுவனத்தின் ...
பறக்கும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு
வான் வழிப் பயணங்களின் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக ரோபோ
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பறக்கும் கருவி ஒன்றை சுவிஸ்
ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தூசு துணிக்கைகள், ஏனைய வான்பொருட்களுடன்
மோதும் சந்தர்ப்பங்களில் தானாகவே பறப்பை நிறுத்தி மீண்டும் சாதகமான நிலைமை
ஏற்படும்போ-து, பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த ரோபோவை
ஆபத்து மிக்க பகுதிகளான குகைகள், அணு ஆராய்ச்சி தொடர்பான பகுதிகளில் பயன்படுத்த
முடியும் என அதனை வடிவமைத்த ஆராச்சியாளர்கள் ...
கேம்களுக்காக பிரத்யேகமான மவுஸ்கள்
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு,
தற்போது கணினி விளையாட்டுக்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்றவர்களை
மையமாக வைத்து கணினி விளையாட்டுகளும், அவற்றிற்கான சாதனங்களும் நாளுக்கு நாள்
மேம்படுத்தப்பட்டும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டும் வருகின்றன.இதனடிப்படையில்,
தற்போது 20 பட்டன்களைக் கொண்ட ஜி600 மவுஸ்கள் கணினி விளையாட்டிற்கென
பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தற்போது
கிடைக்கக்கூடியதாக உள்ள மவுஸ்கள் 6.5 அடிகள் நீளமான கேபிள்களை இணைத்து
இயக்கக்கூடியன. ...
பாதுகாப்புக்கு பயன்படும் லேசர் அறிமுகம்
லேசர் பயன்படுத்தி சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் ஒரு முறை விரைவில் அறிமுகமாக
இருக்கிறது. வீடு ஒன்றின் பாதுகாப்பிற்காக பலகை, இரும்பு போன்றவற்றால் கதவு, ஜன்னல்
என்பவற்றை அமைத்தாலும் இன்றைய தொழில்நுட்ப உலகில் பாதுகாப்பு என்பது
கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எனவே அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
முன்கூட்டியே எச்சரிக்கைகளைப் பெற்று செயற்படுவது மிகச் சிறந்ததாகும். இதன்
அடிப்படையில் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வீட்டின்
சுற்றுப்புறத்தில் நிகழும் மற்றவர்களின் நடமாட்டங்களை துல்லியமாக அறிந்து நடவடிக்கை
எடுக்க ...
பெண்களின் மார்பக புற்று நோயை காட்டிக்கொடுக்கும் ரத்த பரிசோதனை
மார்பக புற்றுநோய் உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எளிய இரத்த பரிசோதனை
மூலம் கண்டறியமுடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இத்தகைய பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடும்
என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கமுடியும் என்று இந்த ஆய்வை
மேற்கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.கேன்சர் ரிசர்ச் என்கிற
மருத்துவ தேடலில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில்
இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் தலைமையிலான
...
எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி
எச்.ஐ.வியை வீட்டிலேயே சோதனை செய்து கொள்வதற்கான கருவியை விற்பனை செய்வதற்கு
அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் குழு ஒன்று
பரிந்துரைத்துள்ளது. ஒராகுயிக் என்னும் பெயரிலான இந்த கருவியை, வாயில் தடவி
எடுப்பதன் மூலம் ஏதாவது நோய்க்கிருமிகள் உடலில் இருக்கிறதா என்பதை 20 நிமிடங்களில்
அறிந்துகொள்ள முடியும்.உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இது
அங்கீகரிக்கப்பட்டால், எச்.ஐ.வியை உடனடியாக வீட்டிலேயே சோதனை செய்துகொள்வதற்கான
முதலாவது கருவியாக இது இருக்கும். இந்தக் கருவியின் மூலமான சோதனை முடிவுகள் 100
சதவீதம் துல்லியமானவை என்று
0 comments:
கருத்துரையிடுக