siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 28 ஜூலை, 2012

இலங்கை கடற்படை சித்திரவதை செய்து கழிவறைகளில் தங்க வைத்தனர்! தமிழக மீனவர்கள் புகார்!

 
  28 யூலை 2012,
இலங்கையிலிருந்து விடுதலையாகி இன்று காலை இராமேஸ்வரம் திரும்பிய தமிழக மீனவர்கள், தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.
கடந்த 21ம் தேதி கச்சதீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கடும் முயற்சிக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை மண்டபம் பகுதிக்கு வந்தனர்.
மண்டபம் காவல் படையினர் அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். 23 மீனவர்களுடன் அவர்கள் சென்ற 5 படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அவர்களிடம் காவல்துறையினர் விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர். பிறகு அவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதனிடையே தாங்கள் இந்திய கடற்பகுதிக்குள் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இலங்கை கடற்படையினர் தான் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்களது கழுத்தில் கத்தி மற்றும் துப்பாக்கியை வைத்து,"தங்களுடன் வராவிட்டால் கொன்று விடுவோம்” என மிரட்டி அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தங்களை கைகளில் விலங்கிட்டு நாய்களைப் போன்று நடத்தியதாகவும், கழிவறைகளிலேயே தங்க வைத்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இலங்கை கடற்படையினர், இந்திய படையினரிடம் நேற்றிரவு ஒப்படைத்து விட்ட போதிலும், இந்திய படையினரும் அவர்களது பங்கிற்கு தங்களை இரவு முழுவதும் கடுமையாக நடத்தி விசாரணை மேற்கொண்டதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

0 comments:

கருத்துரையிடுக