siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 28 ஜூலை, 2012

அசாமில் அமைதி திரும்புகிறது முகாமில் 4 லட்சம் பேர் தஞ்சம்

 

 


கவுகாத்தி : அசாமில் அமைதி திரும்பினாலும், 4 லட்சம் மக்கள் வீடிழந்து, முகாம்களில் உள்ளனர். அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டம் ஜெயபூரில் வங்கதேச முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள போடோ பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர் அணித்தலைவர்கள் இரண்டு பேர் மீது கடந்த வாரம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கலவரம் துப்ரி, சிராங், உதல்குரி ஆகிய பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. 100 வீடுகள் கொளுத்தப்பட்டன. வீடுகளை விட்டு வெளியேறிய 4 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கலவரத்தை அடக்க ராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கவுகாத்தியில் நேற்று பேட்டியளித்த முதல்வர் தருண் கோகய் கூறியதாவது: அசாமில் ஏற்பட்ட கலவரத்தால் அரசு மோசமான நெருக்கடியை சந்தித்தது. கலவரத்தை தடுக்க அரசு சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டது. கலவரத்தில் 45 பேர் கொல்லப்பட்டனர். 4 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலைமையை பிரதமர் மன்மோகன் சிங் நாளை பார்வையிடுகிறார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கோக்ரஜாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ரயில்போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.
இவ்வாறு தருண் கோகய் கூறினார்.

மத்திய அரசு மீது புகார்: கலவரம் ஏற்பட்டதுமே ராணுவம் வரவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், தாமதமாகத்தான் ராணுவம் வந்தது. தாமதத்துக்கு சில நடைமுறை விதிகளும் காரணம். இவ்வாறு தருண் கோகய் கூறினார்

0 comments:

கருத்துரையிடுக