எச்.ஐ.வியை முழுமையாக குணமாக்குவது சாத்தியம்மு : ஆராய்ச்சியில் தகவல்
எச்.ஐ.வி வைரஸை முழுமையாக குணப்படுத்தக்கூடிய சாத்தியப்பாட்டிற்கான முதல் படியை
தாங்கள் எட்டியிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். எச்.ஐ.வி
வைரஸானது மனித உடலுக்குள் புகுந்ததும் உடனடியாக தாக்குவதில்லை. மனித உடலில் சில
செல்களுக்குள் புகுந்துகொண்டு செயற்படாமல் மறைந்து ஒளிந்துகொள்கிறது. இப்படியான
நிலையில் இந்த எச் ஐ வி வைரஸானது பல ஆண்டுகள் மறைவாக இருக்க முடியும்.இப்படி
செல்களுக்குள் புகுந்துகொண்ட நிலையில் இருக்கும் எச்.ஐ.வி வைரஸை கண்டுபிடிக்கவே
முடியாது. குறிப்பாக மனித உடலின் நோய் எதிர்ப்பு செல்களாலோ, எச்.ஐ.வி தொற்றுக்கு
...
இந்த நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காரணம்
புதிய பொருட்களும், புதுவிதமான தகவல் பரிமாற்ற முறைகளும் கூட கண்டுபிடிப்புகளை
விரைவுபடுத்துகின்றன. எஃகு (ஸ்டீல்), பிளாஸ்டிக் மற்றும் சில செயற்கைப் பொருட்களின்
வரவால் இதற்கு முன் சாத்தியமே இல்லாத கண்டு பிடிப்புகள் உருவாகியிருக்கின்றன.
முன்பெல்லாம் புத்தகங்களும் பத்திரிகைகளும் மற்ற கண்டுபிடிப்பாளர்கள் என்ன
செய்கிறார்கள் என்று அறிய உதவின. இப்போதோ வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம்
ஆகியவை வெகுவேகமாக தகவல்களைப் பரப்புகின்றன. ஒரு புத்தகத்திலிருந்தோ, ஒரு தொலைபேசி
அழைப்பு மூலமோ, கணிப்பொறியுடன் இணைக்கப்பட்ட நூலகம் மூலமோ, எந்த ஒரு துறையிலும்
...
ஏரிகள் உருவான வரலாறு
பூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கியமானவையே. தண்ணீர் பாய்ந்து
வந்து நிறைகிற வெற்றிடமோ, பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும். தண்ணீர் ஊறி மண் வழியே
வெளியேறாத நிலமும், அணைக்கட்டுகளுக்குப் பின்னால் உள்ள இடங்களும்தான் ஏரிக்கு
ஏற்றவை. பூமித்தட்டின் நடனமும் பனிக்கட்டி உருகுதலுமே பல ஏரிகள் ஏற்பட காரணம்.
படிப்படியாக பூமித்தட்டு மேலே எழும்போது அணைகள் போன்ற அமைப்புகளும், கன்னாபின்னா
வென இயக்கம் ஏற்படும்போது அகன்ற, ஆழமான ஏரிகளும் உருவாகின்றன. ஆப்ரிக்காவையும்
ஆசியாவையும் வெட்டியதுபோல பிரிக்கும் ரிஃப்ட் பள்ளத்தாக்கு, பல கன்னாபின்னா ஏரிகள்
...
கை, கால்களை கட்டினால் வேகமாக ஓட முடியாது
கைகள், கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து இயங்குவதால் நம்மால்
நடக்கவும் ஓடவும் முடிகிறது. சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு
மையம் நமது காலடியில் விழும். இதனால் நமது உடல் சமநிலையில் நிற்க முடிகிறது.
நடக்கும்போதும், ஓடும்போதும் கால்கள் இயல்பு நிலையில் இருந்து மாற்றம் பெறுவதால்
ஈர்ப்பு மையம் முன்னோக்கிச் செல்லும். இந்நிலையில், நமது கைகள்
கட்டப்பட்டிருக்குமானால் உடலின் சமநிலை தடுமாறி கீழே விழ நேரிடும். மேலும், இயல்பாக
நடக்கும்போதோ, ஓடும்போதோ, இந்நிலை ஏற்படாதற்குக் காரணம், நமது கை கால்கள் முன்னும்
பின்னும் மாறி மாறி ...
ஹை வோல்டேஜ் மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளில் இருந்து ஒலி ஏற்படுவதின் காரணம்
உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின்
அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த ஒலி
உண்டாவதற்கு கம்பியில் செல்லும் மின்னோட்டம் காரணமல்ல. நரம்பிசைக் கருவிகளில் உள்ள
தந்திகளில் தடை ஏற்படும் போது ஒலி எழும்புவதை நம்மால் அறிய முடியும்.
கோபுரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிக விரைந்து வீசும் காற்றின் காரணமாக
ஒத்ததிர்வுக்கு ஆட்படுகின்றன. எனவே தான் மின்கம்பிகளில் ஒலி உண்டாகிறது. இவ்வொலியே
வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஒலியைப் போல நமக்குக் ...
பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் ஏன் இயக்க முடியாது?
பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே
மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை.
ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப்
பற்றல் வெப்பநிலை என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும்
தேவைப்படும். அடுத்து பெட்ரோல் இயந்திரத்தில் எரிபொருள்-காற்றுக் கலவையைப்
பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி ஆகும். மேலும், இவற்றில்
எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு
அதாவது ...
புளூட்டோவின் 5 ஆவது நிலாவைக் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்
ஹூஸ்டன்: நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் ப்ளூட்டோவின் 5ஆவது நிலாவையும் நாசா
வி்ஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் 10வது கிரகமாக சில
காலத்திற்கு முன்பு வரை திகழ்ந்து வந்த ப்ளூட்டோ பின்னர் அதிலிருந்து விலக்கி
வைக்கப்பட்டு விட்டது. ப்ளூட்டோவைச் சுற்றிலும் நான்கு நிலாக்கள் இருப்பது இதுவரை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 5ஆவது நிலாவை நாசா விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். எஸ் 2012 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய நிலா,
ப்ளூட்டோவிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஒழுங்கற்ற வடிவில் காணப்படுகிறது.
ப்ளூட்டோவின் 5 ...
அழகாய் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம் : நாசாவின் புதிய தகவல்
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான
நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில்
செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி
தருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே
பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தின் வின்டர்
சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச்
சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில்
காட்சியாகியுள்ளது. நான்கு ...
கருமுட்டை பரிசோதனை குழந்தையை பாதிக்காது : ஆய்வில் தகவல்
செயற்கைமுறை கருத்தரிப்பின்போது சினையுற்ற கருமுட்டை செல்லை பிரித்தெடுத்து
பரிசோதிப்பதால், அந்த கருமுட்டையின் எஞ்சிய செல்களிலிருந்து பிறக்கும் குழந்தைக்கு
பாதிப்பில்லை என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. செயற்கை முறையில் குழந்தை
உருவாகும்போது பிறக்கும் குழந்தைக்கு மரபணு வழியாக பரவும் நோய்கள் அல்லது
குறைபாடுகள் இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள்
நடத்தப்படுவது வாடிக்கை. அதாவது செயற்கை முறையில் கருத்தரிக்கச்செய்யப்பட்ட
கருமுட்டையானது, மூன்று நாட்கள் கழித்துப்பார்க்கும்போது ஒரு செல்லாக இருந்த
நிலைமாறி மொத்தம் ...
அழிந்துப் போன அரிய ஆமை இனம்
எக்வடோர் நாட்டின் தீவான கேலப்பகோஸ் தீவில் அமைந்திருக்கும் கேலப்பகோஸ் தேசியப்
பூங்காவில் நூறு வயதான ஒரு அரிய ஆமை இறந்து விட்டதாக அந்த தேசியப் பூங்காவின்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்னந்தனி ஜார்ஜ் என்று அழைக்கப்பட்ட இந்த அரிய ஆமை,
அதன் இனத்தில் கடைசி ஆமையாகக் கருதப்படுகிறது. இதன் வயது 100 இருக்கலாம் என்று
விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இதன் மரணத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய
பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என இந்தப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதைக் கடந்த 40 ஆண்டுகளாகப் பராமரித்து வந்த பூங்கா ஊழியர் பட்டியில் அது இறந்து
கிடந்ததைக் ...
நாளுக்கொரு மாத்திரை எச்.ஐ.வி.யை கட்டுப்படுத்தும்
ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிடுவதன் மூலம் எச் ஐ வி தொற்றை
கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எச்.ஐ.வி
தொற்றுக்குள்ளானவர்களின் நோய் முற்றி, எயிட்ஸ் நோயாக மாறாமல் தடுப்பதற்கு தற்போது
ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகள் மாத்திரை வடிவில் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகள்
எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும்,
பாதிக்கப்பட்டவர்கள் சராசரி வாழ்க்கை வாழ்வதற்கு பெரிதும் துணை புரிகின்றன. இந்த
ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால், ...
கண்ணுக்கு தெரியாத பூச்சிக்கு எறும்பு தலைதான் பிடிச்ச டிஷ்
பாங்காக்: விலங்கின ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தேடுதலில் உலகில்
மேலும் ஒரு அரிய, புதிய பூச்சி இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பல்வேறு
ஆய்வுகளிலும் தொடர்ந்து புதிய சாதனைப் பட்டியல்கள் நீண்டு கொண்டிருக்கும் நிலையில்
இதுவும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நுண்ணிய
பூச்சியினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலகிலேயே இதுதான் முதன் முறை என்று
ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் குழுவின்
கண்டுபிடிப்பு இது. விலங்கின ஆர்வலர்களின் இந்த கண்டுபிடிப்பு குறித்து வெளியாகி
உள்ள தகவல் ...
88 ஆண்டுகளில் நாடு, தீவுகள் காலி : பீதி கிளப்பும் ஆராய்ச்சியாளர்கள்
லண்டன்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தாவிட்டால் கடல் மட்டம் 2100-ம்
ஆண்டில் ஒரு அடி அதிகரிக்கும். 2300-ம் ஆண்டில் சுமார் 5 அடி அதிகரிக்கும் என்று
பீதி கிளப்புகின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். புவி வெப்பம் உயர்வு,
சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடல் மட்டம் வேகமாக
உயர்ந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பருவநிலை மாறுபாடுகள் மற்றும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு
ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள்
கூறியதாவது: இயற்கை மற்றும் மனித ...
‘கடவுளின் அணுத் துகள்’ கண்டுபிடிப்பு
ஜெனீவா: பிரபஞ்சத்தை படைத்தது யார்... என்ற கேள்விக்கு துகளை பதிலாக நேற்று
காட்டியுள்ளனர் இயற்பியல் விஞ்ஞானிகள். அந்த துகள் பெயர் ஹிக்ஸ் போசான். இப்படி
பிரபஞ்சம் படைக்கப்பட்ட கதை தொடங்கியது 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன். அதை பிக்
பேங் என்கிறார்கள். பிரம்மாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து
சிதறியதில்தான் நாம் இருக்கும் பூமி உட்பட நட்சத்திரங்கள், கோள்கள் வளி மண்டலத்தில்
நிலை கொண்டன என்பது அந்த தியரி.பிக் பேங் வெடிப்பு நடந்த விநாடியில் ஒலியை விட
அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் அணுக்கள் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த
நிறையும் (னீணீss) ...
விண்வெளியில் நிகழப் போகும் `மெகா’ மோதல்!
நமது
பூமி உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய பால்வீதி மண்டலம், தனது அண்டை வீடான `ஆண்ட்ரமீடா
கேலக்சி’யுடன் மோதப் போகிறது. இதனால் சூரியன் உள்பட நட்சத்திரங்கள் எல்லாம்
அங்குமிங்கும் வீசியெறியப்படப் போகின்றன. பயப்படாதீர்கள், இதெல்லாம் நடப்பதற்கு 400
கோடி ஆண்டுகள் ஆகும்!
அமெரிக்காவின்
பால்டிமோரில் உள்ள ஸ்பேஸ் டெலஸ்கோப் சயன்ஸ் இன்ஸ்டிட்யூட் விண்வெளி
ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல் இது.
உலகிலேயே பெரிசு.. 300 கோடி ஆண்டு பழசு
கோபன்ஹேகன்: விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பிரமாண்ட பள்ளம் கிரீன்லாந்தில் உள்ளது
கண்டுபிடிக்கப்பட்டது. 100 கி.மீ. விட்டம் கொண்ட இப்பள்ளம் 300 கோடி ஆண்டு
பழமையானது என்றும் தெரியவந்துள்ளது. டென்மார்க் அருகே உள்ள கிரீன்லாந்து நாட்டில்
உலகின் மிக பழமையான, மிகப்பெரிய விண்கல் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் புவியியல் ஆய்வு துறை மற்றும் கிரீன்லாந்து ஆராய்ச்சியாளர் ஆடம் க்ரேட்
தலைமையில் நடைபெற்ற ஆய்வின் அரிய கண்டுபிடிப்பு இது. கிரீன்லாந்தின் மனிட்ஸ்சாக்
என்ற இடத்தில் இந்த மெகா சைஸ் பள்ளம் உள்ளது. பள்ளம் உருவாக காரணமான விண்கல்லின்
மாதிரிகள் ...
கடவுளின் துகள் ஹிக்ஸ் போசானின் ஒரு பகுதி கண்டுபிடிப்பு
ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போசன்
தியரி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 40 ட்ரில்லியன் புரோட்டான்களை
அதிவேகத்தில் மோத விட்டு சோதனை நடத்தினர். இதில் இயற்பியல் துறையில் முக்கிய
கண்டுபிடிப்பாக கடவுளின் துகள் என கூறப்படும் ஹிக்ஸ் போசானின் சிறிய பகுதி
கண்டறியபட்டு உள்ளது. அவற்றின் தன்மை மிக உறுதியாகவும், கடினமாகவும் உள்ளது.
இத்தகவலை சுவிட்சர்லாந்து செர்ன் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து பேசிய அவர்கள், கடிவுளின் துகள் என அழைக்கப்படும் இந்த ஹிக்ஸ் போசானை
கண்டுபிடிக்க அதிக நாட்களை ...
இன்று இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கும் : நேரக் கண்காணிப்பாளர்கள் தகவல்
வாஷிங்டன்: உலகளாவிய நேரப்படி, இன்று சனி இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கிறது
என்று சர்வதேச நேரக் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, ஜூன் 30-ஆம் தேதி
இரவு 11:59:59 மணிக்குப் பிறகு ஜூலை 1ஆம் தேதிக்கு முன் 11:59:60 என்று ஓரு விநாடி
நேரம் அதிகரிக்கும். இந்த பூகோள நேர மாற்றத்தை அனைவரும் திருத்திக் கொள்ள வேண்டும்
என்று பாரீசில் செயல்பட்டு வரும் சர்வதேச புவுயியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேனியல்
காம்பிஸ் கேட்டுக் ...
பவழப்பாறைகளை காப்பாற்றும் கடற்புற்கள்
சிலவகை கடற்புற்களை வளர்ப்பதன் மூலம் வேகமாக அழிந்துவரும் பவழப்பாறைகளை
காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடலில்
இருக்கும் பவழப்பாறைகள், கடந்த 40 ஆண்டுகளாக வேகமாக அழிந்துவருகின்றன. பூமியானது
வேகமாக வெப்பமடைவது தான் இதற்கான காரணமாக கருதப்படுகிறது. அதாவது மனிதனும்,
தொழிற்சாலைகளும் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவு வேகமாக அதிகரித்து சுற்றுசூழலில்
கார்பனின் அளவை அதிகப்படுத்துகிறது. இப்படி சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் கார்பன்,
கடல்நீரிலும் அதிகரிக்கும் போது கடல்நீரின் அமிலத்தன்மையும் கூடுகிறது. இப்படி
...
நெபுலாவில் இருந்து உருவான நட்சத்திரக் குடும்பம்
விந்தையான விண்வெளி ரகசியங்களில் சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு
விண்வெளியில் நெபுலா எனப்படும் மையபகுதியிலிருந்து சூரியன் உள்பட ஆயிரக்கணக்கான
நட்சத்திரங்கள் தோன்றியதாக கருதப்படுகிறது. பால்வெளியில் அவை இப்பொழுது எங்கு
உள்ளன. சூரியனின் அந்த நட்சத்திர சகோதரர்களை பற்றிய தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டு
தான் இருக்கின்றன. இதற்கிடையில், கடந்த வருடம் டச்சு நாட்டை சேர்ந்த வானியலாளர்
போர்சுகீஸ் ஷ்வார்ட் என்பவர், பூமியை சுற்றி 330 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஏறக்குறைய
10 முதல் 60 நட்சத்திரங்கள் வரை பரவியிருக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார். இரவு
...
0 comments:
கருத்துரையிடுக