வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
அமெரிக்கா உட்பட பல்வேறு
நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர்
ஜூலியன் அசாஞ்ச்.
இதனால் அசாஞ்ச் மீது கடும் கோபத்தில் உள்ளது அமெரிக்கா. இந்நிலையில் அசாஞ்ச்
மீது சுவீடன் அரசு பாலியல் வழக்கை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக லண்டனில் தங்கியிருந்த அசாஞ்ச் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் ஜாமீனில் வந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈக்வடார் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மார்கோ அல்புஜா மார்டினஸ் கூறுகையில், அசாஞ்சின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு பிரிட்டன் அரசு அனுமதி தரவேண்டும் என்று தெரிவித்தார். |
வியாழன், 25 அக்டோபர், 2012
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சுக்கு உடல்நலக்குறைவு
வியாழன், அக்டோபர் 25, 2012
செய்திகள்