siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 12 செப்டம்பர், 2022

ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி விளம்பரங்கள் செய்வதற்கு தடை

நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு தடை அறிவித்திருக்கிறது.
நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் என்னும் டச்சு நகர், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இறைச்சிக்காக பொதுவெளிகளில் விளம்பரம் செய்யப்படுவதற்கு தடை அறிவித்திருக்கிறது. 
உலகிலேயே இறைச்சி விளம்பரம் செய்வதற்கு தடை விதித்த முதல் நகரமாக ஹார்லெம் மாறவிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி, 1,60,000 பேர் வாழும் அந்த நகரில் வரும் 2024 ஆம் வருடத்திலிருந்து திரையரங்குகள், பேருந்துகள் முதலான பொதுவெளிகளில், தீவிர முறை பண்ணை வளர்ப்பு இறைச்சிக்கான விளம்பரங்கள் 
செய்யக்கூடாது 
என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவெளிகளில் மோசமான இறைச்சி குறித்து விளம்பரங்கள் செய்வதை அந்நகரம் தடை செய்திருக்கிறது. அதே நேரத்தில் இயற்கையான இறைச்சிகளுக்கு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தடை இருக்குமா? என்பது குறித்து அந்நகரம் தற்போது வரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 comments:

கருத்துரையிடுக