
புது தில்லி அடுத்த கோகுல்புரி பகுதியைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் யோகேஷ்(20), அதே பகுதியைச் சேர்ந்த ஆஷா(19), இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, இது தொடர்பாக ஆஷாவின் வீட்டில் யோகேஷ் பேசினார்.
ஆனால், ஆஷாவின் பெற்றோர் சூரஜ், மாயா மற்றும் உறவினர் ஓம்பிரகாஷ் அவரது மனைவி குஷ்பு, இவர்களின் மகன் சஞ்சீவ் ஆகியோர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆஷா, யோகேஷ் இருவரையும் அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி, மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்தனர்.
இவ்வழக்கு தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. வெள்ளிக்கிழமை தீர்ப்பை வெளியிட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரமேஷ் குமார் சிங்கல், குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்