Saturday 06 October2012 By.Rajah.360ஆண்டுகளுக்கு முன்பு பேரரசர் மொகாலய மன்னர் ஷாஜஹான், அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கல்லறை காதல் ஓவியமான தாஜ்மஹாலை கட்டினான். இதை கட்ட 22 வருடங்கள் ஆனது. காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த உலகப் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை 'தாஜ்மஹால்' கட்டிடத்தைப் போல் நான்கு மடங்கு பெரிய தாஜ் அரேபியா என்ற ஒரு மாதிரி தாஜ்மஹாலை கட்ட துபாய் கட்டுமானக் கம்பெனி முடிவு செய்துள்ளது.
அதற்குரிய வரைபடங்கள் வரையும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். துபாய் நாட்டின் எமிரேட்ஸ் சாலையில் உள்ள 4 கோடியே 10 லட்சம் சதுர அடிகொண்ட பால்கன் அதிசய நகரத்தின் மையப்பகுதியில் அது அமையவுள்ளது.
இரண்டு வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ள இந்த தாஜ் அரேபியா கட்டிடத்திற்கு 100 கோடி டாலர் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
தாஜ் அரேபியா என்ற கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக விளங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும். 7 கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஓட்டலும் இருக்கும்.
திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான். அதை கொண்டாடுவதற்கு இந்தோனேசிய பாலிதீவு மற்றும் பல அழகிய இடங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். ஆனால் இனி அவர்கள் துபாயின் தாஜ் அரேபியா என்ற இந்த கட்டிடத்திற்குதான் வருவார்கள் என இந்த மெகா திட்டக் கம்பெனியின் சேர்மன் அருண் மெஹ்ரா கூறியுள்ளார்.
இன்றைய நவீன உலகில் விவாகரத்துகள் அதிகரித்துவரும் நிலையில் முன்பு போல் காதல் மற்றும் உணர்ச்சிகளை உணரவைத்து திருமணப் பந்தத்தின் அவசியத்தை இது ஞாபகப்படுத்தும். துபாயின் இந்த பால்கன் அதிசய நகரமானது, உலக அதிசயங்களாக விளங்கும் பிரமிடுகள், தொங்கும் தோட்டம், ஈபிள் டவர், தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் பைசா நகரச் சாய் கோபுரம் ஆகியவற்றை உள்ளடக்கி நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் என்று கூறப்படுகிறது