siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

பொது இடத்தில் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட தம்பதி கைது

 சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
வால்மார்ட் கடையில் பொருட்களை திருடியதுடன், அங்கு வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட தம்பதியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ளது கன்சாஸ் நகரம். இங்கு வசிப்பவர்கள் டினா ஜியானாகோன்(வயது 35) , ஜூலியன் கால்(வயது 22). தம்பதிகளான இவர்கள் சமீபத்தில் வால்மார்ட் கடைக்கு சென்றனர்.
அங்கு பல பொருட்களை சுருட்டினர். அப்போது திடீரென இருவரும் ஒரு குறுகிய இடத்தில் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.
பொருட்களை எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பொலிக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் விரைந்து வந்து டினாவையும் ஜூலியனையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது திருட்டு, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டது, ஆபாசமாக செயல்பட்டது போன்ற பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் ஹட்சின்சன் என்ற பகுதிகளில் உள்ள கடைகளில் ஏற்கனவே பல பொருட்களை திருடியுள்ளதும் அவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வால்மார்ட் கடையில் தம்பதி இவ்வாறு நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0 comments:

கருத்துரையிடுக