siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

வேலூரில் பயங்கரம்லாரி மீது கார் மோதி 3 இன்ஜினியரிங் மாணவர்கள் பலி

 





2012-08-04
வேலூர்: வேலூர் அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (21), மேடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டா (21), கடப்பா பகுதியை சேர்ந்தவர் கோபாவரம் மாருதி பிரசாத் (21), ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜிவ் சிங் சோலங்கி (21), அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் துனுர்தத்தா ரெட்டி (21). வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களான இவர்கள் காட்பாடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்று அதிகாலை அதே கல்லூரி மாணவர் சுப்பாராவ் (22) என்பவருக்கு சொந்தமான காரில் 5 பேரும் சித்தூர் சென்றுள்ளனர். அங்கு பஸ்நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை திருப்பத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. உயிருக்கு போராடியவர்களை காரை உடைத்து மீட்டனர். ஆனாலும் ராஜிவ் சிங் சோலங்கி இடிபாடுகளில் சிக்கி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்ற நால்வரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தனுர் தத்தா ரெட்டி, கோபாவரம் மாருதி பிரசாத் ஆகியோர் இறந்தனர். ஜெய்சங்கர், மணிகண்டா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக