siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

பாரதிராஜாவின் புது நாயகி

பாரதிராஜாவின் புது நாயகி
 Saturday, 04 August 2012,
இயக்குனர் பாரதிராஜா, தான் இயக்கி வரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இரண்டாவது நாயகியாக சுபிக்ஷவை அறிமுகப்படுத்துகின்றார்.
நீண்ட நாட்களுக்கு பின்பு இயக்குனர் பாரதிராஜா புதிய படத்தை இயக்குகிறார் என்றால் அப்படம் மிகுந்த வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் கொலிவுட் காத்திருக்கின்றது.
கடந்த ஆண்டு அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் தொடக்க விழாவிற்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்திருந்தது.
அமீர், இனியா, கார்த்திகாவுடன் படப்பிடிப்பு நடந்த நிலையில், பெப்சி- தயாரிப்பாளர் சங்க மோதல் காரணமாக திடீரென இந்தப் படம் நின்றுபோனது.
இதன் காரணமாக இயக்குனர் அமீர் இப்படத்திலிருந்து விலகினார். பின்னர் திகதிகள் பிரச்சினையால் இனியாவும் விலகினார்.
இந்த நிலையில், பாரதிராஜா மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குகிறார். இனியாவின் வேடத்தில் நடிக்க புதுமுகம் சுபிக்ஷா என்பவரை தெரிவு செய்துள்ளார்.
சமீபத்தில் சுபிக்ஷாவுக்கு புகைப்பட ஒத்திகை நடத்தி, படமெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக