யாழ். மாவட்டத்தில் கடந்த 7 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 313 பேர் சட்டவிரோத மதுசார விற்பனை மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த குற்றத் துக்காக அவர்களிடம் இருந்து 9 லட்சத்து 23 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது இந்தத் தண்டம் அறவிடப்பட்டது என யாழ்.மாவட்ட மதுவரித்திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் சட்டவிரோத மது உற்பத்தி கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரப்பட் டுள்ள போதும், அரச சாரா யத்தை பதிவு செய்யாமல் விற்பனை செய்தவர்களும் 21 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு சிகரெட் விற்பனை செய்தவர்களும் யாழ்.மது வரித் திணைக்கள உத்தி யோகத்தர்களால் இனங் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியங்காடு ஆகிய பிரதேசங்களில் மதுவரித் திணைக்களத்தின் சட்ட சேவை களுக்கு அப்பால் மது மற் றும் சிகரெட் விற்பனைகள் அதிகம் இடம் பெறுகின்றன என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.எனினும் மதுவரித் திணைக்களத்தால் இனங் காணப்பட்ட பிரதேசங்க ளில் இருந்து கடந்த 7 மாத காலப் பகுதிக்குள் மட்டும் 313 பேர் கைது செய்யப்பட் டனர்.
இவர்கள் ஊர்காவற் றுறை மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டபோது நீதி மன்றங்கள் 9 லட்சத்து 23 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடுமாறு தீர்ப்ப ளித்தது.இதனை விட கடந்த மாதம் 30 ஆம் திகதி ஆனைக் கோட்டை, நல்லூர், கல்வி யங்காடு ஆகிய பிரதேசங் களில் இருந்து 21 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு சிக ரெட் விற்பனை செய்தமைக் காக 13 பேர் கைது செய் யப்பட்டு யாழ்ப்பாணம் நீதி மன்றில் முன்னிலைப்படுத் தப்பட்டனர்.
இவர்களில் ஒவ்வொரு நபருக்கும் 4 ஆயிரம் ரூபா வீதம் 53 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்து மாறு தீர்ப்பளிக்கப்பட்டது.அத்துடன் கடந்த வரு டம் கசிப்பு உற்பத்தி யாழ். மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக தீவகம், கொழும்புத்துறை ஆகிய பிரதேசங்களில் பெரும் பிரச்சினையாக இருந் தது. என்று மேலும் தெரி விக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக