siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 9 பிப்ரவரி, 2013

செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள்

 
ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள். பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. கண்கள், இதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் கணனி சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன. இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை மனிதன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறான். வருகிற மார்ச் 11ம் திகதி வரை அவனை பொதுமக்கள் பார்த்து மகிழலாம். செயற்கை மனிதனின் சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், செயற்கை நுரையீரல்கள், ஸ்வாகாணொளி,சீன் பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது,[]

0 comments:

கருத்துரையிடுக