பிரிட்டனில் உள்ள அனைத்து நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும் என அரசு திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரிட்டனில் நாய்களை செல்லபிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், நாய்கள் கடித்து பலர் உயிரிழக்கின்றனர்.
இதற்கிடையே நாய்கள் அதிகளவு திருட்டு போகின்றன. எனவே எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாய்களின் கழுத்துபட்டையில் மைக்ரோசிப் பொருத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் நாயின் உரிமையாளர் பற்றிய முழுவிபரங்கள் இருக்கும். இதன் மூலம் தொலைந்து போன நாயின் உரிமையாளர் பற்றிய விபரம் எளிதில் தெரியவரும்.
மேலும் நாய்கடியால் பாதிக்கப்பட்ட நபர்கள், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாகவும் இருக்கும்.
குறிப்பிட்ட திகதிக்குள் தங்கள் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது
0 comments:
கருத்துரையிடுக