25.09.2012.By.Rajah.இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது ஆறு புள்ளி நான்கு சதவீதம் எனக் காணப்பட்டதாக குடிசன மதிப்பு புள்ளிவிபரத் தினைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
இதுவே, இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் 7.9 சதவீதமாகவும், முன்னைய ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 8.1 சதவீதம் என உயர்வாக வளர்ச்சி கண்டிருந்தது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், விவசாயம் (9.1%) மற்றும் சேவைத் (4.5%) துறைகள் சுமாராகவே வளர்ச்சி கண்டிருந்தன. இலங்கையில் தொடரும் வரட்சி நிலைமைகளினால் விவசாயம் மற்றும் நீர் மின் உற்பத்திகள் பாதிப்படைந்துள்ளன.
மறுகையில், மேற்கு உலகில் தொடரும் பொருளாதார மந்த நிலைமைகளினால் இலங்கையின் சேவைத் துறை சோர்வடைந்துள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்