01.09.2012.BY.rajah.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை பார்வையிடச் சென்ற
சிங்களப் பெண்ணொருவர் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்
பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஜேபி சிறியலதா (வயது56) என்ற பெரும்பான்மையினப்
பெண்ணே உயிரிழந்தவராவார்.
கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு,
புதுக்குடியிருப்பில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின்
வீட்டை குறித்த பெண் பார்வையிடச் சென்றுள்ளார்.
இதன் போது அவரது வீட்டைப் பார்வையிடும்போது
அங்கிருந்த பங்கர் ஒன்றினுள் தவறி விழுந்துள்ளார். இதன் காரணமாகத் தலையில் கடுமையான
காயங்களுடன் முல்லைத்தீவு வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா
வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பயனின்றி நேற்று நண்பகல் உயிரிழந்தார்.
சடலம் உடல் கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர்
உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது