Saturday, 01 September 2012, BY.rajah. |
சாதி அடையாளங்களை பெயரோடு சுமந்து திரியும் வழக்கம் தற்போது பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது. |
குறிப்பாக பிரபலமாக உள்ள பல பெண்கள் தங்கள் பெயரோடு அய்யர், ரெட்டி, பிள்ளை,
நாயுடு என போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். நடிக்க சான்ஸ் கேட்டு வரும் போது, பெயரையோ, அதனுடன் ஒட்டியிருக்கும் சாதி அடையாளத்தையோ மாற்றக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறார்கள். இதனை எந்த இயக்குநரும் கண்டிப்பதில்லை. பாலா கூட தன் படத்தின் நாயகி ஜனனி அய்யர் என்ற சாதி அடையாளத்துடன் நடிக்க அனுமதித்தார். அதே ஜனனி அய்யர் நடித்துள்ள இன்னொரு படம் பாகன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார். இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சேபிக்கிறேன் என்று தெரிவித்துள்ளாராம் |
சனி, 1 செப்டம்பர், 2012
அதென்ன ஜனனி அய்யர்? இயக்குனர் ஆவேசம்
சனி, செப்டம்பர் 01, 2012
செய்திகள்