பேராயர்கள் எதிர்ப்பு.
மகப்பேற்றின் போது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலைமை வரும் போது அவர் கருக்கலைப்பு செய்வதை சட்டரீதியானதாக்குவோம் என்று அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
சவிதா ஹலப்பனவர் என்ற இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் மரணமடைந்த ஏழாவது வாரத்தில் இந்த நகர்வு வருகிறது.
31 வயதான சவீதா 17 வார கர்ப்பிணியாக இருந்தபோது கல்வே மருத்துவமனையில் கருச்சிதைவு ஒன்றை அடுத்து மரணமானார். முன்னதாகவே கருக்கலைப்பு செய்துகொள்ள அவர் பலமுறை கேட்டிருந்தும், அதற்கு அயர்லாந்தில் சட்டத்தில் இடமில்லை என்ற காரணத்தினால் அது மறுக்கப்பட்டதாக சவீதாவின் உறவினர்கள் கூறுகிறார்கள்.
சுகவீனமுற்றிருந்த அவருக்கு முன்னதாகவே கருக்கலைப்பு செய்திருந்தால் அவர் உயிர் தப்பியிருப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையிலேயே தற்போதைய சட்டத்தில் இந்த மாற்றத்தை அயர்லாந்து நாடாளுமன்றம் கொண்டுவருகிறது.
ஆனால், கார்டினல் சோன் பிரடி உட்பட அயர்லாந்தின் 4 கத்தோலிக்க பேராயர்களும் இந்த முடிவை விமர்சித்திருக்கிறார்கள்.
கருக்கலைப்பு என்பது அயர்லாந்தில் தற்போது சட்டவிரோதமானதாகும். ஆனால் தாயின் உயிருக்கு உண்மையான அதேவேளை அதிகபட்ச ஆபத்து இருக்கிறது என்ற தருணத்தில் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும். உயிராபத்தன்றி, தாயின் சுகாதார காரணங்களுக்காகக் கூட கருக்கலைப்பு செய்ய முடியாது.
இருந்தபோதிலும், அந்த கருக்கலைப்பை எந்த தருணத்தில் அல்லது எத்தகைய சூழ்நிலையில் செய்யலாம் என்பது குறித்து மருத்துவர்கள் திடமாக முடிவு செய்வதற்கு தேவையான சட்டத்தை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றியிருக்கவில்லை.
புதிய சட்ட ஏற்பாடு பெண்களின் உயிருக்கு ஆபத்தான தருணங்கள் குறித்த சட்டங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று அயர்லாந்து அரசாங்கம் கூறுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஒரு சட்டத்தெளிவை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அடுத்து தற்போதைய நகர்வு வந்திருக்கிறது.
மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய உடன்படிக்கையின் கீழான அயர்லாந்து அரசாங்கத்தின் கடப்பாடுகளுக்கும் இந்த புதிய ஏற்பாடு பொருந்திப்போவதாக உள்ளது.
அமைச்சர் கருத்து
இந்த விவகாரத்தில் இருக்கக்கூடிய பலதரப்பட்ட உணர்வலைகளையும் கருத்தில் கொண்டே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அயர்லாந்து குடியரசின் சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
பலருக்கும் இந்த விடயம் குறித்து தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், கருவுற்ற பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கடப்பாட்டையும் அரசாங்கம் உறுதி செய்ய விளைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
''கருவுற்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களுக்கு எது சட்டபூர்வமானது என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், கருவில் இருக்கும் பிள்ளையின் சம உரிமையையும் நாம் கருத்தில் கொண்டுள்ளோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
பேராயர்கள் எதிர்ப்பு
''தற்போதைய பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், தாய்க்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் தற்போதைய சட்டத்தில் மிகக் கவனமாக வழங்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான சம உரிமையும் அயர்லாந்தில் உள்ள மருத்துவ சிகிச்சைமுறையும் அடிப்படையிலேயே மாற்றப்பட்டுவிடும்'' என்று அயர்லாந்தில் பேராயர்கள் கூட்டாக வெளியிட்டுள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.
இது கருவில் இருக்கும் குழந்தைகள் நேரடியாகவும் வேண்டுமென்றும் கொல்லப்படும் நிலைக்கு உள்ளாக்கிவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆகவே இதுகுறித்த நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் கோரியுள்ளனர்.
கருக்கலைப்பு குறித்த விடயம் அயர்லாந்தில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் ஆழமாக பிளவுபட்ட கருத்துக்களையே கொண்டிருக்கின்றது.
இந்த நிபுணர் குழுவின் ஆரிக்கை மற்றும் சவீதாவின் மரணம் ஆகியவற்றை அடுத்து அயர்லாந்து நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு குறித்து மூன்று விவாதங்கள் நடந்துள்ளன.
கருக்கலைப்பு தொடர்பில் பல மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்களை அயர்லாந்து குடியரசு நடாத்தியிருக்கிறது.
அதன் மூலம் 1983 இல் தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் உயிர் வாழ சம உரிமை உண்டு என்பது அங்கீகரிக்கப்பட்டது.
1992 இல் பெண்கள் நாட்டை விட்டு வெளியே சென்று கருக்கலைப்பு
0 comments:
கருத்துரையிடுக