siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 8 செப்டம்பர், 2012

தேர்தல் சட்டவிதிகளுக்கு மாறாக பொருட்கள் விநியோகம் செய்தவர் கைது


08-09-2012.BY.Rajah.
மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பிரிவுக்குட்பட்ட குருமண்வெளிப் பகுதியில் தேர்தல் சட்டவிதிகளுக்கு மாறான முறையில் மக்களுக்குப் பொருட்கள் விநியோகம் செய்த ஒருவரைக் களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை குருமண்வெளிப்பகுதியில் பொருட்களை விநியோகம் செய்துகொண்டிருக்கும்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் பொருட்களை விநியோகம் செய்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் இவ்வாறு பொருட்களை விநியோகம்செய்துவருவது தொடர்பில் முறைப்பாடுகள் தேர்தல் கண்காணிப்புக்குழுக்களிடம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.