மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 22பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக தமிழர்கள் விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இப்பகுதியில் உள்ள காணிகளை பிடித்தும் பலரிடம் ஆசை வார்த்தை காட்டி காணிகளை வாங்கியுள்ள முஸ்லிம்கள் சிலர் இப்பகுதியில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகக்கு தடைகளை ஏற்படுத்திவருவதுடன் அவர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கைகளையும் தடுத்துவந்தனர்.
இது தொடர்பில் கடந்த ஆண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இது தொடர்பில் இப்பகுதியில் முறுகல் நிலையேற்பட்டு இராணுவத்தின் தலையீட்டின் காரணமாக அந்த முறுகல் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற பெருமளவான முஸ்லிம் குண்டர்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது 22 விவசாயிகள் காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்,
தமது பகுதிக்கான தண்ணீர் வரும்பகுதியை சில முஸ்லிம் விவசாயிகள் அடைத்துவைத்து தமது பகுதிக்கு அதனை திரும்பியிருந்தனர்.இதனை திறந்துவிடுமாறு பல்வேறு தடவைகள் கோரியபோதிலும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்இதண்ணீர் இல்லாத காரணத்தினால் எமது விவசாய நடவடிக்கைகள் முடங்கிப்போகின.
இதனை கருத்தில்கொண்டு இன்று அப்பகுதியில் விவசாயம் செய்யும் நாங்கள் அப்பகுதிக்கு சென்று தண்ணீர் கட்டப்பட்டுள்ள பகுதியில் திறந்துவிட முயற்சி செய்தோம்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த பெருமளவானோர் எம்மீது தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் நடத்தியவர்களில் அதிகமானோர் அப்பகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் அப்பகுதியில் ஈடுபடுவதில்லை.திட்டமிட்ட வகையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்துவதன் மூலம் இப்பகுதியில் உள்ள காணிகளை தமிழர்கள் விற்றுவிட்டுச்செல்வார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்
0 comments:
கருத்துரையிடுக