சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்குப் விஜயம் மேற்கொள்ளவுள்ள நவநீதம்பிள்ளை, பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் போருக்குப் பிந்திய மாற்றங்கள் குறித்து தாம் அவதானிக்கவுள்ளதாகவும், தனது பயணத்தின் போது, சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஓகஸ்ட் 25ம் நாள் கொழும்பு செல்லும் நவநீதம்பிள்ளை, 31ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக