siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 30 ஜூன், 2013

பஸில் ராஜபக்ஷ இந்தியா பயணம்!


 சிறீலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலும் படை ரீதியிலும் முறுகல் நிலை வலுவடைந்துள்ள இந்த நேரத்தில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 4 ஆம் திகதி புதுடில்லிக்குப் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் '13' ஆவது திருத்தம் மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்பன தொடர்பில் சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டை இந்தியாவுக்குத் தெளிவாக விளக்குவதற்கே பஸில் அழைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதற்கு சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இந்தியா இதற்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
அவ்வாறு ஏதாவது நடந்தால் சிறீலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதற்கும் அது எண்ணியுள்ளது. அத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7 ஆம் திகதி சிறீலங்கா செல்லவுள்ளார் இதேவேளை இந்தியாவில் பயிற்சிக்குச் சென்ற சிறீலங்கா படையினரை தமிழகத்தின் எதிர்ப்புக் காரணமாக நாட்டுக்குத் திருப்பி அழைத்துள்ளது இலங்கை. இவ்வாறாறு இராஜதந்திர முறுகல் நிலை வலுவடைந்து வரும் நிலையில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் அமைச் சர் பஸில் ராஜபக்ஷ புது டில்லிக்கு விரைகிறார் எனத் தெரியவருகிறது

0 comments:

கருத்துரையிடுக