வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று தென்கொரியா ஜனாதிபதி மியூங் பக் எச்சரித்துள்ளார்.
தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் இன்னும் சில தினங்களில் ஓய்வு பெறவுள்ளார். அவரது இந்த ஐந்தாண்டு பதவிக் காலத்தில் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்தன.
இந்நிலையில் லீ மியூங் பக் தனது ஓய்வை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை மூலம் மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அது தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
வடகொரியா சமீபத்தில் மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதையடுத்து அதன் மீது ஐ.நா. மேலும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக