பிரித்தானியாவில் சிறுவனுக்கு காண்டம் விற்ற கடைக்காரருக்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த எம்மா ஓப்பி, என்பவர் தன் பத்து வயது மகனுக்கு கை செலவுக்கு பணம் தந்தார்.
அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மருந்து கடைக்கு சென்று திரும்பிய மகனின் கைகளில் 20 ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எம்மா ஓப்பி, "காண்டம்" விற்ற கடைக்காரரிடம் சண்டை போட்டார்.
இது குறித்து மருந்து கடைக்காரர் குறிப்பிடுகையில், கடைகளில் எந்த வயதினருக்கு ஆணுறை விற்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. மேலும் குறிப்பிட்ட வயதினருக்கு ஆணுறை விற்க தடைசெய்யும் சட்டம் பிரித்தானியாவில் இல்லை.
ஆணுறைக்குள் நீரை நிரப்பி, தண்ணீர் பந்து போல விளையாடுவான் என்று நினைத்து விற்றோம் என்றார். இதற்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் குழந்தைகளுக்கு ஆணுறை விற்பதை தடை செய்யும் சட்டம் ஏதும் இல்லையென்றாலும் இந்த விடயத்தில் கடைக்காரர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர்
0 comments:
கருத்துரையிடுக