உச்சிப்பனிச் சறுக்கு விளையாட பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்குக் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்து யூரி மாநிலத்தில் திடீரென தீப்பிடித்தது.
உடனே ஓட்டுநர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி 38 மாணவர்களையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டார்.
உடன் சென்ற 7 பெரியவர்களும் எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பினர்.
கோத்தார்டு குகைப்பாதைக்குள் நுழையும் இடத்தில் கடந்த 8ம் திகதி அதிகாலை 5 மணியளவில் A2 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக யூரி மாநிலப் பொலிசார் தெரிவித்தனர்.
கோட்ஹார்டு தீயணைப்புப் படை வீரர் தீயை அணைத்தனர். 12000 ஃபிராங்க் மதிப்பிலான பொருட்சேதம் இத் தீவிபத்தில் ஏற்பட்டுள்ளது.
பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 20 அன்று கோட்ஹார்டு குகைப்பாதையில் காரும் சரக்குப் பெட்டக வண்டியும் மோதியது குறிப்பிடத்தக்கது
வியாழன், 10 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக