siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அமெரிக்காவில் தீவிரவாதி வேடத்தில் தம்பியை வீதியில் உலவ விட்ட வாலிபர்



Friday28September2012By.Rajah. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள போனிஸ்நகரை சேர்ந்தவர் மைக்கேல் டி டர்லி. இவர் தனது தம்பிக்கு தீவிரவாதி வேடமிட்டார். அவரது முகத்தை துணியால் மூடினார். போலி ராக்கெட் லாஞ்சர் துப்பாக்கியை கொடுத்து அதை தோளில் சுமந்தபடி போயனிஸ் நகரின் மிகவும் பரப்பரப்பான வீதியில் உலவ விட்டார்.

அதை வீடியோ காமிரா மூலம் படம் பிடித்து அதை யூடியூப் இணைய தளத்தில் வெளியிட்டார். அதைபார்த்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மக்களிடையே தீவிரவாதி குறித்த பீதியை ஏற்படுத்திய டர்லியை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, கடந்த ஜூலை 20-ந்தேதி அரோரா சினிமா தியேட்டரில் மர்ம நபர் சுட்டதில் 20 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து நகரில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து பரி சோதிக்கவே நான் இவ்வாறு நடந்து கொண்டேன் என தெரிவித்தார். ஆனால் இந்த சம்பவத்தை பார்த்த ஒரு போலீஸ் அதிகாரி இதை கண்டு கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால் இதை போலீசார் மறுத்தனர். சம்பவத்தன்று போனியஸ் நகர வீதியில் தீவிரவாதி வேடத்தில் ஒரு நபர் சுற்றி வருவதையும், அவருடன் டர்லி வீடியோ காமிராவுடன் வந்ததையும் ஒரு போலீஸ் அதிகாரி பார்த்தார். ஆனால் அந்த நபர் டர்லி தம்பி வைத்திருந்த போலி ராக்கெட் லாஞ்சர் துப்பாக்கியை பறிமுதல் செய்யவில்லை எந்தவிதமான பதட்டத்தையும், பரபரப்பையும் அவர் காட்டிக் கொள்ளவில்லை.. டர்லியிடம் இது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஒரு சினிமா படத்துக்காக தான் ஷுட்டிங் நடத்துவதாக கூறி விட்டார். எனவே தான் அந்த அதிகாரி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் கூறினார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட டர்லி ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.