Friday28September2012,By.Rajah.அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 77பேரை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற இந்த 77பேரில் 61 தமிழர்கள், 14 சிங்களவர்கள் இரு முஸ்லிம்கள் அடங்குவதோடு, பெண்ணொருவரும் அவரது கைக்குழந்தையும் இக்குழுவில் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, உடப்பு, மன்னார், சிலாபம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள், மோதர துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்