siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சீனாவில் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி!இலங்கை அரசாங்கம்


Friday28September2012By.Rajah.இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, சீனாவில் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ்களை இறக்குமதி செய்வதன் மூலம் இலங்கையின் போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்று இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
இலங்கை போக்குவரத்து சபையில் 5000 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன அதில் 3500 பஸ்கள் வரை பாவனைக்கு ஏற்றவகையில் அமைந்திருக்கவில்லை.
எனவே சீனாவில் இருந்து பஸ்களை இறக்குமதி செய்ய ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
போக்குவரத்துத்துறையில் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுப்பதாக தனியார் போக்குவரத்து துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கைக்கு தொடர்ந்தும் சொகுசு வாகனங்கள் இறக்குமதி
இலங்கையில் இறக்குமதி வரியற்ற வகையில் பாவனைக்காக 312 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்து 525 வாகனங்கள் இறக்கப்பட்டன.
அதில் 312 சொகுசு வாகனங்கள், இறக்குமதி தீர்வையற்ற வகையில் தருவிக்கப்பட்டுள்ளன.
அதில் பெரும்பாலானவை, Montero Sport, KIA/Hyundai SUV, BMW X 1, X 3, 520D ,Audi A 4, A6 ரகங்களை சேர்ந்தவையாகும்
இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5000 அமரிக்க டொலர் பெறுமதியை கொண்டவையாகும்.
இலங்கை அரசாங்கத்துக்கு இறக்குமதி வரியற்ற வாகனங்கள் காரணமாக பல மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அதனையும் மீறி இறக்குமதி செய்யப்படடு சொகுசு வாகனங்கள், மூன்று வருடங்களுக்கு விற்பனை செய்யப்படக்கூடாது என்று நடைமுறையை மீறி மூன்றாமவருக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் பொதுச்சேவையில் உள்ளவர்களினால் மாற்று ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன