சுவிட்சர்லாந்தின் கிரெடிட்
சுவிஸ் வங்கி தன் முதலீட்டைப் பெருக்குவதற்காக, ஜுரிச் நகரில் இருந்த தன் தலைமைச்
செயலகக் கட்டிடத்தை நார்வே நாட்டு ஓய்வூதியத் திட்டத் துறைக்கு 1 பில்லியன்
ஃபிராங்குக்கு 25 ஆண்டு காலத்துக்கு கொடுத்துள்ளது.
ஒத்திப் பத்திரத்தில் 25 ஆண்டுகள் முடிந்த பின்பு மேலும் ஒரு 15 ஆண்டுகள் ஒத்து
நீட்டிக்கப்படலாம் என்றும் எழுதப்பட்டுள்ளது. Uetilhole என்று அழைக்கப்பட்ட தலைமைச்
செயலகம் நார்வேக்கு இன்று முதல் கைமாறியது என்ற செய்தியை சுவிஸ் வங்கி நேற்று
வெளியிட்டது. எனினும் இச்செயலகத்தில் தொடர்ந்து வங்கியின் செயல்பாடுகள் நடைபெறும். 1970ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட Uetilhole என்ற தலைமைச் செயலகம் 137,807 சதுர மீற்றர் பரப்பளவு உடையது. இதனை ஒத்தி வைத்ததால் வங்கிக்கு 83.7 மில்லியன் ஃபிராங்க் முதலீட்டுத் தொகையாகக் கிடைக்கும். கடந்த வருடம் சுவிஸ் தேசிய வங்கி, கிரெடிட் சுவிஸ் வங்கியிடம் முதலீட்டைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. முதலீட்டைப் பெருக்குவதால் மட்டுமே கிரெடிட் சுவிஸ் வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாகத் திகழ முடியும் என்பதால் இந்த வங்கி தனது தலைமைச் செயலகத்தை ஒத்திக்கு விட்டு பணம் வாங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதமும் கிரெடிட் சுவிஸ் வங்கி தனது Metrolpol கட்டிடத்தை விற்றுக் காசாக்கியது. இந்தக் கட்டிடம் ஜுரிச் தலைமையக கட்டிடத்திலிருந்து சிறிது தொலைவில் தான் இருந்தது. இதனை எவ்வளவு பணத்துக்கு விற்றது என்று என்ற தகவலை வங்கி வெளியிடவில்லை. |
சனி, 1 டிசம்பர், 2012
சுவிஸ் வங்கியின் தலைமைச் செயலகம் விற்பனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக