siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 1 டிசம்பர், 2012

சவீதா விவகாரம்: ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர ?

அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு மறுத்த காரணத்தினால், இந்திய பெண் மருத்துவர் சவீதா மரணமடைந்தார். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சவீதா, தன்னுடைய கணவர் பிரவீனுடன் வசித்து வருகிறார்.
இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, குழந்தை வயிற்றிலேயே இறந்து போனது. இதனையடுத்து கருக்கலைப்பு செய்யும்படி பிரவீன் கூறினார்.
ஆனால், கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு குற்றம் என்று கூறி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ரத்தம் விஷமாகி கடந்த அக்டோபர் 28ஆம் திகதி பரிதாபமாக சவீதா இறந்தார்.
உலகின் பலநாடுகளும் மருத்துவர்கள் அலட்சியத்தை கண்டித்தன. இந்நிலையில், சவீதாவின் மரணம் குறித்து பொது விசாரணை நடத்த அயர்லாந்து சுகாதார துறை அமைச்சர் ஜேம்ஸ் ரெய்லி ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து ஐரோப்பிய மனித உரிமை மீறல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பிரவீனும், சவீதாவின் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
பிரவீன் சார்பில் வக்கீல் ஓ டோனெல் ஆவணங்களை தயாரித்து வருகிறார். அடுத்த வாரம் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்றும் வக்கீல் தெரிவித்துள்ளார்.
பிரவீன் கூறுகையில், என் மனைவி சவீதாவின் மரணம் குறித்து அயர்லாந்து அதிகாரிகள் நடத்திய 2 தனித்தனி விசாரணையில் திருப்தி இல்லை என்று தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக