ஆப்பிரிக்க நாடான காங்கோவில்
பாயின்ட்டி நோரியிலிருந்து பிராசா வில்லே நகருக்கு ஒரு தனியார் நிறுவன சரக்கு
விமானம் வந்து கொண்டிருந்தது.
பிராசா வில்லே அருகே இந்த விமானம் வந்தபோது, இதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதனால் விமானம் கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தல் 30 பேர் உடல் கருகி அதே இடத்தில் பலியாகினர். அவர்களில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் தவிர குடியிருப்பு வாசிகளும் அடங்குவர். விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் வீடுகளும் இடிந்து சேதமடைந்தது. இந்த விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவில்லை என்றாலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது |
சனி, 1 டிசம்பர், 2012
குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக