சீனாவில் வைத்தியப் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஆறு மாணவர்களை விடுமுறை நாட்களில் இலங்கைக்கு வருவதற்கான விமானப் பயணச் சீட்டையும் விடுமுறை முடிந்து மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கான விமானச் சீட்டையும் பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று மாத காலம் ஏமாற்றிய விமானச்சீட்டு விற்பனையாளர் ஒருவரை கடந்த 2 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
சீனாவில் வைத்தியப் பட்டப்படிப்புக்காகச் சென்ற ஆறு மாணவர்களுக்கு விமானச்சீட்டு பெற்றுத் தருவதாக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்தும் தலா 85இ000 ரூபா வீதம் மொத்தமாக 510,000 ரூபாவை கடந்த மார்ச் மாதம் சந்தேக நபர் பெற்று சுமார் மூன்றுமாத காலமாக ஏமாற்றி வந்ததாக பெற்றோரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேக நபர் பம்பலப்பிட்டி பகுதியில் விமானச் சீட்டு விற்பனை முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அவரை விசாரணைகள் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்
0 comments:
கருத்துரையிடுக