siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நிர்வாணமாக போஸ் கொடுத்த தாய்மார்கள்


குழந்தைகளின் பள்ளிப்பேருந்தை காப்பாற்றுவதற்காக தாய்மார்கள் நிர்வாணப் போஸ் கொடுத்துள்ள சம்பவம் ஸ்பெயினில் நடந்தேறியுள்ளது.
ஸ்பெயினின் மான்ட்செர்ராட் நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் பெருகி வரும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிப் பிள்ளைகளுக்கான பேருந்து சேவையை குறைத்தது.
இதனால் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாதிப்புக்குள்ளானார்கள். இதை எதிர்த்து பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திப் பார்த்தனர். ஆனால் நிர்வாகம் இறங்கி வரவில்லை.
இதையடுத்து தாய்மார்கள் சிலர் கூடிப் பேசி அதிரடி முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி 10 பெண்மணிகள் சேர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து காலண்டர் தயாரிப்பது என்றும் அதை விற்று அதில் வரும் காசை பள்ளி நிர்வாகத்தின் பேருந்து சேவைக்குத் தருவது என்றும் முடிவெடுத்தனர்.
இதையடுத்து 10 பேரும் விதம் விதமாக போஸ் கொடுத்தனர். சிலர் டாப்லெஸ்ஸாவும், சிலர் முழு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்தனர். இந்த காலண்டரை விற்பனைக்கும் விட்டனர்.
அதில் அவர்களுக்கு நல்லவரவேற்பும், வருமானமும் கிடைத்தது. இதையடுத்து தற்போது அவர்களிடம் வருகிற யூன் மாதம் வரைக்கும் பேருந்தை இயக்குவதற்குத் தேவையான நிதி கிடைத்து விட்டதாம்.
இதைத் தொடர்ந்து அடுத்த வருடமும் இதேபோல நிர்வாண காலண்டர் போட்டு நிதி சேகரித்து தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளை சமாளிக்க திட்டமிட்டுள்ளனராம்
 

0 comments:

கருத்துரையிடுக