siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 23 பிப்ரவரி, 2013

நினைவு நிகழ்வில் உயிரை விட்ட கணவன். .


மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன்(வயது 94) இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியுள்ளார்.
இவரது மனைவி குவண்டோலின் (வயது 89), பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் 1947ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த 66 வருட காலமாக இணைபிரியாத ஜோடிகளாக இவர்கள் இருந்தார்கள்.
இந்நிலையில் கடந்த 8ம் திகதி குவண்டோலின் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவை நோர்மனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் தான் விரைவில் வந்து சேர்வேன் என அவரது மனைவியின் பூதவுடலைப் பார்த்துக் கூறியுள்ளார்.
இந்நிலையில் குவண்டோலினின் இறுதி நிகழ்வு கடந்த 16ம் திகதி நடைபெற இதில் பங்கேற்கும் பொருட்டு புறப்பட்டுச் சென்ற நோர்மன் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மனைவிக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றியுள்ளதாக அவரது பிள்ளைகளை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதிவாசிகள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக