siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 14 பிப்ரவரி, 2013

கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது:,,


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளை, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் 13 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒருதலைப்பட்சமானது.

சனல்-4 காணொளி, வவுனியா, வெலிக்கடைச் சிறைச்சாலை சம்பவம், புலிகளின் நினைவுத் தூபிகள் அழிக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஹோட்டல் ஒன்று நிர்மானிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் குறித்தும் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்.

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

எனினும், இந்தக் கோரிக்கைகள் ஒரு தலைப்பட்சமானது எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக