நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கே விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாங்கிய கடனை அடைக்க முடியாமை, தொடர்ந்து இயங்க வைக்க பணம் இல்லாமை ஆகிய காரணங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மின்சார செலவைக் கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த அனல் மின் நிலையத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை அரச தரப்புத் தகவல் தெரிவித்துள்ளது.
குறித்த மின் நிலையம் 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த நிலையத்துக்காக சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து உபகரணங்களும் பழையவை என்றும் செயற்பாட்டுக்கு உதவாதவை எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக