மத்திய கிழக்கு நாடான துனிசியாவின் தலைநகர் டுனிஸ்ஸில் நேற்று, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சொக்ரி பெலாயிட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துனிசியாவின் இடதுசாரி ஜனநாயக தேசப்பற்று இயக்கத்தின் செயலாளரான இவர், தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இக்கொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
துனீசியாவில் முன்னால் ஜனாதிபதி பென் அலி என்பவர் 2011ம் ஆண்டு தொடக்கத்தில் பதவியிறக்கப்பட்ட பின் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலை இதுவாகும்.
இச்சம்பவத்தையடுத்து துனீசிய தற்போதைய ஜனாதிபதி மொன்செஃப் மார்ஷௌக்கி தனது பிரான்ஸுக்கான குறுகிய கால விஜயத்தை ரத்து செய்து நாடு திரும்பியுள்ளார்.மேலும் எகிப்துக்குச் செல்லவிருந்த தனது பயணத்தையும் கைவிட்டுள்ளார்
வியாழன், 7 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக