siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 6 பிப்ரவரி, 2013

ரஷ்யாவில் கடும் பனிப் பொழிவு!

ரஷ்யாவின், தலைநகர் மொஸ்கோவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 216 சென்டிமீட்டர் அளவு பனி பொழிந்துள்ளது. இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 1.5 மடங்கு அதிகமாகும். பனிப்பொழிவால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிற்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது மொஸ்கோ நகருக்கும் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மெட்ரிட் நகருக்கும் இடையேயான தூரத்துக்கு சமமானது . இந்த பனிப்பொழிவால் விமானப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செயப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு செல்லும் 155 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் பிரதமரின் விமானம் உள்ளிட்ட 56 விமானங்கள் வேறு இடங்களில் தரை இறக்கப்பட்டுள்ளன.

0 comments:

கருத்துரையிடுக