siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்தமைக்கான தடயங்கள்

கிழக்கில் ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்த தடயங்கள், சான்றுகள் மற்றும் கல்வெட்டுக்கள தற்போதும் காணப்பட்டு வருகின்றன. இவை ஒருபுறமிருக்க தற்போது கிழக்கின் பல பாகங்களுக்கும் தெற்கிலுள்ள குழு ஒன்று இரகசியமான முறையில் ஆதிகால தடயங்களை கண்டு கொள்வதற்காக தேடுதல் வேட்டை ஒன்றில் இறங்கியுள்ளது. அதற்கு தமிழினத்தின் சிலரும் உறுதுணையாக அமைகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். தழிழர்கள் வாழ்ந்து வந்த பாரிம்பரிய பண்டைய இடங்களில் ஆதிவாசிகளான தமது பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதனை ஆதாரம் காட்டி பின்னர் அவ்விடங்களை பொது இடமாக பிரகடனப்படுத்தி அதனை அரசுடமையாக்கி பின்னர் பெரும்பான்மை இனமக்களை குடியேற்றுவதே இதன்நோக்கமாகும் என இப்பகுதி பழம்பெரும் தமிழ் மூதாதையர்களும் ஆய்வாளர்களும் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள உன்னிச்சை, வெல்லாவெளி, பட்டிப்பளை.வவுணதீவு, வாகரை போன்ற பிரதேசங்களில் இந்நடவடிக்கைகளை அவதானிக்க முடிகின்றது. இவற்றுள் சில இடங்களை இலங்கை இராணுவத்தினரே இவ்வாறு அடையாளம் காட்டிக் கொடுக்கிள்றார்கள் என்பதும் புலனாகின்றது {புகைப்படங்கள்]

0 comments:

கருத்துரையிடுக