பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள், "கற்பழிப்பு விளையாட்டு" என்ற பெயரில் விளையாடிய விளையாட்டு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக "ரேப் கேம்" என்ற பெயரில் வீடியோ கேம் ஒன்று உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது.
ரயிலில் பயணிக்கும் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் கற்பழிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கேமுக்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பினாலும் சிலர் அதை ரகசியமாக விளையாடி வருகின்றனர்.
பிரித்தானியாவின் கிழக்கு சசசெக்ஸ் பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் உணவு இடைவேளையின் போது 10 முதல் 13 வயதுள்ள மாணவர்கள், இந்த பெயரில் உள்ள விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு மாணவன் மற்றவர்களை துரத்தி சென்று பிடிக்க வேண்டும் என்பது தான் விளையாட்டின் விதி என்றாலும் ரேப் கேம் என அவர்கள் அதற்கு பெயரிட்டு விளையாடியது தான் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் குழந்தைகள் இவ்வளவு மோசமான வார்த்தையை எப்படி கற்றுக்கொண்டனர் என அவர்கள் கவலையுற்றனர்.
எனினும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையிட்டு அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என மாணவர்களிடம் கேட்டுக்கொண்டதையடுத்து "தப்பிப் பிழைக்கும் ஆட்டம்" என அந்த விளையாட்டுக்கு தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக