siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 11 அக்டோபர், 2012

கென்யாவில் எம்.பி.க்களுக்கு அதிகளவு போனஸ்: மக்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்ரிக்க நாடுகளிலேயே கென்யா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் சம்பளம் அதிகம். ஒவ்வொரு நபரும் 5.7 லட்ச ரூபாய் மாத சம்பளமாக பெறுகின்றனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கென்ற நாடாளுமன்றத்தில் 222 இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் உறுப்பினர்களுக்கு போன்ஸ் அளிக்கும் சட்டம் நாடாளுமனறத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொருவருக்கும் 60 லட்ச ரூபாய் போனசாக கிடைக்கும்.
கென்யாவில் பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாததை கண்டித்து, கடந்த மாதம் மூன்று வாரங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
இதே போன்று சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போனஸ் அளிக்கும் திட்டம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளன.
இதனை கண்டித்து ஏராளமான மக்கள் நைரோபி நகரில் ஜனாதிபதி மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.