வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
ஜப்பானியர் அமெரிக்காவில் கைது விமானத்தில் கையெறி குண்டை
எடுத்து சென்ற ஜப்பானியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில கடந்த 2001ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு விமான
பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நகம் வெட்டி, கத்தரிகோல், சிறு கத்திகள் உள்ளிட்ட பொருட்கள் விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தை தகர்க்க சதி செய்யும் பயங்கரவாதிகள் திரவ வடிவில் வெடிமருந்துகளை உடலில் மறைத்து எடுத்து செல்ல முயற்சி செய்கின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஜப்பானை சேர்ந்த யோங்டா ஹுயாங் ஹாரிஸ்(வயது 28) என்ற நபர் 5ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய போது அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தார். தீயினால் பாதிக்காத பேன்ட் போட்டிருந்தார். புகையை கிளப்பும் கையெறி குண்டும், விஷவாயுவிலிருந்து காத்துக் கொள்ளும் முகமூடியும் உள்ளிட்டவைகளை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள், அவரை பொலிசிடம் ஒப்படைத்தனர். பொலிசார் விசாரணை நடத்தவும் ஒத்துழைக்கவில்லை. ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினால் எதையும் சொல்ல முடியாது. பகிரங்கமாக விசாரணை நடத்தினால் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன் என தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ஹாரிஸ், பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். தற்போது அவர் ஜப்பானில் வசிக்கிறார். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை விமானத்தில் கொண்டு வந்ததற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரை அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்படும். |
முகப்பு |